Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தினேஷ் கார்த்திக் கனவில் விளையாடிய மழை.. ஏமாற்றத்தில் ரசிகர்கள்.. சமனான தொடரில் நாயகன் விருது யார்?

பெங்களூரு: இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 5வது டி20 போட்டி மழையால் கைவிடப்பட்டது.

Recommended Video

IND vs SA 5வது T20 போட்டி மழை காரணமாக ரத்து! தொடர் சமனில் முடிந்தது | *cricket

2 க்கு 2 என்ற கணக்கில் தொடர் சமனில் இருந்ததால் , தொடரை தீர்மானிக்கும் கடைசி போட்டி நடைபெற்றது.

மேலும் ஆர்சிபி ரசிகர்களின் அபிமான வீரராக மாறியுள்ள தினேஷ் கார்த்திக், பெங்களூரு மைதானத்தில் பட்டையை கிளப்பலாம் என எதிர்பார்த்தார். ஆனால், அவரது கனவில் மழை விளையாடியது.

தொடர் மழை

தொடர் மழை

5 வது முறையாக இந்திய அணி கேப்டன் ரிஷப் பண்ட் டாஸை இழந்ததால், இந்திய அணி பேட்டிங் செய்ய நேர்ந்தது. இஷான் கிஷன், ருத்துராஜ் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, இந்தய அணி 3.3 ஓவரில் 28 ரன்களுக்கு 2 விக்கெட் என்று குறைக்கப்பட்டது. அப்போது மழை மீண்டும் குறுக்கிட்டதால் ஆட்டம் தடைப்பட்டது. பெங்களூருவில் எவ்வளவு மழை பெய்தாலும், தண்ணீர் வெளியேற சிறப்பு வடிகால் வசதி செய்யப்பட்டது.

ஆட்டம் ரத்து

ஆட்டம் ரத்து

மழை நின்றால் 10 நிமிடத்தில் போட்டி நடைபெறும் வகையில் அனைத்து அம்சங்களும் இருந்தன. ஆனால் மழை கொஞ்சம் கூட இரக்கம் காட்டவில்லை.. இரவு 10.12 மணிக்குள் போட்டி தொடங்கினால் 5 ஓவர்களாக போட்டி நடைபெறும் என்று அறிவிப்பு வெளியான நிலையில், தொடர்ந்து மழை பெய்து வருவதால் , அதற்கு மேல் வாய்ப்பு என நடுவர்கள் முடிவு எடுத்தனர்.

ரிஷப் பண்ட் மகிழ்ச்சி

ரிஷப் பண்ட் மகிழ்ச்சி

இதனையடுத்து, 9.37 மணிக்கே போட்டியை கைவிடுவதாக நடுவர்கள் அறிவித்தனர். இதனிடையே, தொடர் சமனானது குறித்து பேசிய ரிஷப் பண்ட், ஆட்டம் நடைபெறவில்லை என்று வெறுப்பு ஆவதை விட, இந்த தொடரில் நடந்த நல்ல அம்சங்களை பார்க்கிறேன். புதுமையாக விளையாட நினைக்கிறோம். புதிய வழிகளில் வெற்றி பெற வேண்டும் என நினைக்கிறோம். அப்போது தவறு நடப்பது சகஜம் தான். நாங்கள் ஒரு அணியாக சரியான பாதையில் செல்கிறோம். கேப்டன்ஷி மற்றும் பேட்டிங்கில் 100 சதவீதம் என்னுடைய பங்களிப்பை கொடுக்கிறேன்.

தொடர் நாயகன் விருது

தொடர் நாயகன் விருது

இதனிடையே, 7 விக்கெட்டுகள் வீழ்த்திய ஹர்சல் பட்டேல், 206 ரன்கள் அடித்த இஷான் கிஷனுக்கு தொடர் நாயகன் விருது கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 6 முக்கிய விக்கெட்டுகளை கொடுத்து குறைந்த ரன்கள் கொடுத்த புவனேஸ்வர் குமாருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இனி இந்திய அணி வரும் 26ஆம் தேதி அயர்லாந்துடன் விளையாடுகிறது.

Story first published: Sunday, June 19, 2022, 22:56 [IST]
Other articles published on Jun 19, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+