நியூசி.க்கு வில்லனாக மாறிய மழை.. இந்தியாவுக்கும் நாளை ஆபத்து.. முக்கிய ஆட்டங்கள் மழையால் ரத்தாகலாம்!
நியூசி.க்கு வில்லனாக மாறிய மழை.. இந்தியாவுக்கும் நாளை ஆபத்து.. முக்கிய ஆட்டங்கள் மழையால் ரத்தாகலாம்!
மெல்போர்ன் : 2022 டி20 உலககோப்பை நடைபெற்று வரும் ஆஸ்திரேலியாவில் மழை மிரட்டுவதால், பல போட்டிகள் ரத்தாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய ஆடுகளங்கள் ரன் குவிப்பு மற்றும் பந்தவீச்சு என இரண்டிற்கும் சமமாக இருப்பதால் இந்த தொடர் ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமையலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் தான் குறுக்கே இந்த கௌசிக் வந்தால் என்பது போல் ரசிகர்களின் விருந்தை மழை கெடுத்து வருகிறது.

மழையால் சிக்கல்
இந்த நிலையில், ஏற்கனவே தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே மோதிய ஆட்டத்தில் வெற்றியின் அருகே தென்னாப்பிரிக்கா வந்த நிலையில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் ரத்து செய்யப்பட்டு, இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி கிடைத்தது. ஜிம்பாப்வேவை வீழ்த்தி ரன் ரேட்டை அதிகரிக்க நினைத்த தென்னாப்பிரிக்காவுக்கு சிக்கலை தந்தது.

2 ஆட்டங்கள் பாதிப்பு
தற்போது இன்று காலை நடைபெற்ற இங்கிலாந்து, அயர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் மழை குறுக்கிட்டதால் டக் வொர்த் லூயிஸ் விதிப்படி அயர்லாந்து வெற்றி பெற்றுவிட்டதாக அறிவிக்கப்பட்டது. இதே போன்று நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் இன்று மதியம் நடைபெற்ற ஆட்டமும் மழையால் ரத்து செய்யப்பட்டு ஒரு புள்ளிகள் பகிர்ந்து வழங்கப்பட்டுள்ளது.

சிட்னி வானிலை
இது நியூசிலாந்து அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில், நாளை சிட்னியில் மழை பெய்ய 73 சதவீதம் வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. இதனால் தென்னாப்பிரிக்கா, வங்கதேசம் மோதும் ஆட்டமும், இந்தியா, நெதர்லாந்து அணிகள் மோதும் ஆட்டமும் மழையால் ரத்தாகலாம் என அஞ்சப்படுகிறது.

அடுத்த வாரமும் மழை
இதே போன்று அடுத்த வாரமும் ஆஸ்திரேலியாவில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால் பெரும்பாலான ஆட்டங்கள் மழையால் ரத்து செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பல கோடி அளவில் நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது.


Click it and Unblock the Notifications