Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஓய்வு பெறும் சங்ககாராவுக்கு வருண பகவானே நேரில் வந்து வாழ்த்து! நெகிழும் ரசிகர்கள்

சிட்னி: உலக கோப்பை தொடருடன் கிரிக்கெட்டுக்கு குட்பை சொல்லிய சங்ககாரா இன்று அவுட் ஆன அடுத்த நொடியே மழை பெய்ய தொடங்கியது. வருண பகவானே அவரை வாழ்த்தி வழியனுப்பினார் என்று புகழ்கின்றனர் அவரது ரசிகர்கள்.

இலங்கை விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் குமார் சங்ககாரா நடப்பு உலக கோப்பை தொடருடன் ஓய்வு பெறப்போவதாக அறிவித்தார். கடைசி தொடர் என்பதால், சங்ககாரா முழு உத்வேகத்துடன் ஆடி வந்தார்.

லீக் சுற்றில் 6 போட்டிகளில் ஆடி, தொடர்ந்து 4 சதங்களையும் விளாசி, ரன் குவிப்பில் முதலிடத்தில் இருந்தார். இந்நிலையில், இன்று தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான காலிறுதி போட்டியில் சங்ககாரா 45 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

சதம் மிஸ்சிங்

சதம் மிஸ்சிங்

இதன்மூலம் தொடர்ந்து 5வது முறையாக செஞ்சுரி அடிக்கும் வாய்ப்பு தவறிவிட்டது. நல்ல டச்சில் இருந்த சங்ககாரா, மறுமுனையில், 8 விக்கெட்டுகள் வீழ்ந்துவிட்டதால், வேறு வழியில்லாமல், அடித்து ஆட தொடங்கி அவுட் ஆனார்.

சங்ககாராவுக்கு கடைசி போட்டி..

சங்ககாராவுக்கு கடைசி போட்டி..

அவர் அவுட் ஆகும்போது இலங்கை 129 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. அப்போது, இலங்கை தோல்வியடைய வாய்ப்புகள் பிரகாசமாக இருந்தன. எனவே, இந்த போட்டிதான், சங்ககாராவுக்கு கடைசி போட்டியாகவும் அமையும் என்ற கவலை ரசிகர்களை தொற்றியது.

வந்தார் வருண பகவான்

வந்தார் வருண பகவான்

அப்போதுதான், அந்த சம்பவம் நடந்தது. ஆம்.. சங்ககாரா அவுட் ஆகி பெவிலியனை நோக்கி நடக்க ஆரம்பித்ததும், திடீரென மழை கொட்டோ கொட்டு என கொட்டத் தொடங்கியது.

வானிலை இலாகாவே திணறல்

வானிலை இலாகாவே திணறல்

சிட்னியில் இன்று வானம் தெளிவாக இருக்கும் என்று வானிலை இலாகா அறிவித்திருந்த நிலையில், இந்த மழை சங்ககாரா ரசிகர்களை வேறு மாதிரி சிந்திக்க வைத்துள்ளது.

ரசிகர்களின் பாசம்

ரசிகர்களின் பாசம்

சங்ககாரா உலகத்தரம் மிக்க வீரர் மட்டுமின்றி, மனித நேயம் உள்ளவராகும். எனவே, அவர் அவுட் ஆகும்போது, வருண பகவானே மழை தூரி வாழ்த்து தெரிவித்துவிட்டார் என்று அவரது ரசிகர்கள் நெகிழ்ச்சியுடன் கூறுகின்றனர். மழை பெய்ததால், ரசிகர்களும், அவரவர் இருக்கையில் இருந்து எழுந்து நின்றனர். சங்ககாராவுக்கு இயற்கையே 'ஸ்டாண்டிங் ஓவேசன்' மரியாதை கொடுக்க செய்ததாகவும், சமூக வலைத்தளங்களில் சங்ககாரா ரசிகர்கள் உருகிவருகின்றனர்.

Story first published: Wednesday, March 18, 2015, 12:18 [IST]
Other articles published on Mar 18, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+