Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வங்கதேச ஒருநாள் தொடரிலும் இந்திய அணிக்கு 'தண்ணிலதான் கண்டம்'!

டாக்கா: டெஸ்ட் தொடருக்கு மட்டுமில்லாமல், ஒருநாள் கிரிக்கெட் தொடரிலும், மழை பெய்து ஆட்டத்தை கலைக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளதாக வங்கதேச வானிலை இலாகா தகவல்கள் உறுதி செய்கின்றன.

வங்கதேசத்தின் பதுல்லா நகரில் நடைபெற்ற இந்தியா-வங்கதேச கிரிக்கெட் அணிகளுக்கு நடுவேயான டெஸ்ட் போட்டியின் பெரும்பகுதி மழையால் பாதிக்கப்பட்டு ஆட்டம் டிராவில் முடிவடைந்தது.

வட போச்சே

வட போச்சே

வங்கதேச கிரிக்கெட் வரலாற்றிலேயே முதல்முறையாக அந்த நாட்டின் பருவமழை சீசனான ஜூன் மாதத்தில் டெஸ்ட் போட்டி தற்போதுதான் நடத்தப்பட்டது. அது இந்தியாவுக்கு பாதகமாக முடிந்தது டெஸ்ட் போட்டி டிரா ஆனதால் இந்திய அணி டெஸ்ட் தரவரிசையில் 4வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

இப்பவுமா

இப்பவுமா

இந்நிலையில், ஜூன் 18ம் தேதி முதல் 24ம் தேதிவரை நடைபெற உள்ள 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கும் மழை அச்சுறுத்தல் உள்ளதாக வானிலை இலாகா கூறுகிறது. வங்கதேச தலைநகர் டாக்காவில் பக்கெட்டை கவிழ்த்தியது போல மழை கொட்டி தீர்ப்பதாக கிரிக்கெட் கமாண்டேட்டர் ஹர்ஷா போக்லே டிவிட் செய்துள்ளார் என்பதை வைத்தே அதன் தீவிரத்தை புரிந்துகொள்ள முடியும்.

நம்மள பாடாபடுத்துதே

நம்மள பாடாபடுத்துதே

மூன்று ஒருநாள் போட்டிகளுமே பகல் இரவு ஆட்டமாகும். அனைத்தும் மிர்பூர் நகரில் நடக்க உள்ளன. அங்கும் மழை விடாமல் பெய்து வருகிறது. இந்த மழை 24ம் தேதிவரை நீடிக்கும் என்று வானிலை இலாகா கூறியுள்ளது. இப்படியே போட்டிகள் டிராவில் முடிந்து கொண்டிருந்தால் ஒருநாள் தரவரிசையிலும் இந்தியா பின்னுக்கு தள்ளப்படும் சூழல் உருவாகியுள்ளது.

ஒருவேள தண்ணில கண்டமா?

ஒருவேள தண்ணில கண்டமா?

இந்திய அணி உலக கோப்பை தொடரை முடித்துவிட்டு, தற்போதுதான் ஒரு தொடரில் ஆடி வருகிறது. ஆனால், ஆரம்பத்திலேயே இந்திய அணிக்கு தண்ணீரில்தான் கண்டம் போல. ரவி சாஸ்திரியை நல்ல சாஸ்திரியாக பார்த்து தோஷம் கழிக்கச் செய்ய வேண்டியதுதான் போலும்.

Story first published: Monday, June 15, 2015, 13:49 [IST]
Other articles published on Jun 15, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+