For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மழையால் ரத்தான பெங்களூர் - ராஜஸ்தான் ஆட்டம்!

By Shankar
Chinnaswamy Stadium
மும்பை: பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கிடையே நடக்கவிருந்த ஐபிஎல் 20 ஓவர் ஆட்டம் மழையால் நேற்று கைவிடப்பட்டது.

இந்த அணிகளுக்கு இடையிலான லீக் ஆட்டம் நேற்றிரவு 8 மணிக்கு பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் தொடங்குவதாக இருந்தது. போட்டியைக் காண ஏராளமான ரசிகர்கள் குழுமிய நிலவையில் மழை கொட்டியது.

இதனால் திட்டமிட்ட நேரத்தில் போட்டியை தொடங்க முடியவில்லை.

விட்டு விட்டு மழை பெய்து கொண்டே இருந்ததால் ஒரு பந்து கூட வீசப்படாத நிலையில் இரவு 10.55 மணி அளவில் போட்டியை கைவிடுவதாக நடுவர்கள் அறிவித்தனர்.

ஆட்டம் ரத்தானதால் இரு அணிகளும் தலா ஒரு புள்ளியை பெற்றன. புள்ளிகள் பட்டியலில் ராஜஸ்தான் ராயல்ஸ் 5 போட்டிகளில் 2 வெற்றி 2 தோல்விகளுடன் 5 புள்ளிகளைப் பெற்றுள்ளது (இப்போது ஆடாத ஆட்டத்துக்கு ஒரு புள்ளி).

பெங்களூர் அணி 5 போட்டிகளில் 4 தோல்விகளுடன் 3 புள்ளிகள் பெற்றுள்ளது (ரத்தான ஆட்டத்துக்கு ஒரு புள்ளி).

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 6 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.
Story first published: Wednesday, December 7, 2011, 18:46 [IST]
Other articles published on Dec 7, 2011
English summary
The fourth edition of the Indian Premier League witnessed its first washout on Tuesday with the match between Royal Challengers Bangalore and Rajasthan Royals at the Chinnaswamy Stadium being called off without a ball being bowled because of incessant rain.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+