Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐசிசி டெஸ்ட் ரேங்கிங்.. இந்தியாவை பின்னுக்கு தள்ளிய பாக்., முதன் முறையாக முதலிடம் !

துபாய்: சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) டெஸ்ட் தரவரிசை பட்டியலில் இந்தியாவை பின்னுக்கு தள்ளி பாகிஸ்தான் முதன் முறையாக முதலிடத்தை பிடித்துள்ளது.

இலங்கை - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இலங்கை அணி 3-0 என ஆஸ்திரேலியாவை ஒயிட் வாஷ் செய்தது. இதனால் ஆஸ்திரேலியா டெஸ்ட் தரவரிசையில் முதல் இடத்தை இழந்தது.

பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்கு டெஸ்ட் போடடிகள் கொண்ட தொடர் 2-2 என சமநிலையில் முடிந்ததால் பாகிஸ்தான் அணி முதல் இடத்திற்கான விளம்பில் நின்று கொண்டிருந்தது.

இதனிடையே ஆஸ்திரேலியாவை பின்னுக்கு தள்ளிய இந்தியா கடந்த 18-ந்தேதி தரவரிசை பட்டியலில் முதல் இடம் பிடித்தது. இந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான தொடரில் இந்தியா 3-0 என தொடரை கைப்பற்றாவிடில் பாகிஸ்தான் முதல் இடத்தை பிடிக்கும் என்ற நிலை இருந்தது.

தற்போது மழையினால் இந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான போட்டி டிராவில் முடிந்து தொடரை இந்தியா 2-0 எனக் கைப்பற்றியது. தொடரை கைப்பற்றிய போதும் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெறாததால் ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியலில் முதலிடத்தை இழந்தது இந்தியா.

பாகிஸ்தான் அணி 111 புள்ளிகள் பெற்று முதன் முறையாக தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளது. 110 புள்ளிகள் பெற்ற இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. ஆஸ்திரேலியா 108 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. 108 புள்ளிகளுடன் இங்கிலாந்து நான்காவது இடம் பிடித்துள்ளது. நியூசிலாந்து 99 புள்ளிகளுடன் தரவரிசையில் ஐந்தாவது இடத்தில் உள்ளது.

Story first published: Monday, August 22, 2016, 22:57 [IST]
Other articles published on Aug 22, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+