Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரெய்னா - பின்னி ருத்ர தாண்டவம்.. ரசிகர்களுக்கு விருந்து படைத்த லெஜெண்ட்ஸ் கிரிக்கெட்.. முழு விவரம்!

கான்பூர்: ரெய்னா மற்றும் ஸ்டூவர்ட் பின்னியின் ஆக்ரோஷ ஆட்டத்தை காண்பதற்கு நேற்று ரசிகர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

லெஜெண்ட்ஸ் டி20 கிரிக்கெட் தொடர் நேற்று முதல் தொடங்கியது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 6 அணிகள் பங்கேற்றுள்ளன.

அதன்படி நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய லெஜெண்ட்ஸ் மற்றும் தென்னாப்பிரிக்க லெஜெண்ட்ஸ் அணிகள் மோதின.

சிறப்பான ஓப்பனிங்

சிறப்பான ஓப்பனிங்

இதில் டாஸ் வென்ற இந்திய லெஜெண்ட்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. ஓப்பனிங் வீரர்களாக களமிறங்கிய நமன் ஓஜா 21 (18), சச்சின் டெண்டுல்கர் 16 (15) ஆகியோர் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து அதிர்ச்சி கொடுத்தனர். ஆனால் இதன் பின்னர் ஜோடி சேர்ந்த சுரேஷ் ரெய்னா, ஸ்டூவர்ட் பின்னி ஜோடி அதிரடி பார்ட்னர்ஷிப்பை அமைத்தனர்.

பின்னி ஆக்ரோஷம்

பின்னி ஆக்ரோஷம்

22 பந்துகளை சந்தித்த சுரேஷ் ரெய்னா 4 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 33 ரன்களை விளாசினார். இவருடன் சேர்ந்து விளையாடிய ஸ்டூவர்ட் பின்னி 42 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களுடன் 82 ரன்களை விளாசினார். இதனால் 52/2 என இருந்த இந்தியாவின் ஸ்கோர் 116/3 என மாறியது. கடைசி நேரத்தில் யூசஃப் பதான் 15 பந்துகளில் 35 ரன்களை சேர்க்க 20 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 217 ரன்களை சேர்த்தது.

மிடில் ஆர்டர் சொதப்பல்

மிடில் ஆர்டர் சொதப்பல்

கடின இலக்கை நோக்கி களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணியில், தொடக்க வீரர்கள், ஆண்ட்ரூவ் புட்டிக் (23), மோர்னே வான் விக் (26) என ஏமாற்றினர். இதன்பின்னர் வந்த பீட்டர்சன் (10), ஜாக்யூஸ் (16), ஹென்றி (6) என மிடில் ஆர்டர் மொத்தமும் சொதப்பியது. கடைசி வரை போராடிய ஜாண்டி ரோட்ஸ் மட்டும் 38 ரன்கள் அடித்தார். ஆனால் 20 ஓவர்களில் அந்த அணி 156/9 ரன்களை மட்டுமே அடித்தனர்.

ரசிகர்கள் மகிழ்ச்சி

ரசிகர்கள் மகிழ்ச்சி

இதன் மூலம் 61 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியடைந்தது. இந்திய அணி தரப்பில், ராகுல் சர்மா 3 விக்கெட்கள், முனாப் படேல், ப்ரக்யான் ஓஜா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களை வீழ்த்தினார்கள். நீண்ட நாட்களாக ரெய்னாவின் ஆட்டத்தை காண முடியாமல் இருந்த ரசிகர்களுக்கு இது ஒரு விருந்தாக அமைந்தது.

Story first published: Sunday, September 11, 2022, 12:00 [IST]
Other articles published on Sep 11, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+