Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சான்சே இல்லை…!! ஒரு நாளும் இந்தியாவை, பாகிஸ்தான் ஜெயிக்கவே முடியாது…!! அடித்து சொல்லும் அவர்

Recommended Video

World cup 2019 | பாகிஸ்தானின் வெற்றி அடித்து சொல்லும் ரெய்னா

டெல்லி: உலகக்கோப்பைப் தொடரில் இந்திய அணியை பாகிஸ்தான் அணியால் வீழ்த்தவே முடியாது என இந்திய வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. மொத்தமாக 45 லீக் போட்டிகள் மற்றும் 3 நாக் அவுட் போட்டிகள் என 48 போட்டிகள் 12 நகரங்களில் நடக்கவுள்ளது.

Raina confident of india beating Pakistan in world cup 2019

முதல் போட்டியில் இங்கிலாந்தும், 2வது போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியும் வெற்றி பெற்றன. இந்திய அணி வரும் 5ம் தேதி தனது முதலாவது போட்டியில் தென் ஆப்ரிக்காவை எதிர்கொள்கிறது.

இந்நிலையில் இந்திய அணியை பாகிஸ்தான் அணியால் உலக கோப்பை தொடரில் வீழ்த்தவே முடியாது என இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:

இந்திய வீரர்கள் யாரும் தற்போது இந்தியா, பாகிஸ்தான் போட்டி குறித்து சிந்திக்க மாட்டார்கள். காரணம் அதற்கு முன்னால் சில போட்டிகள் நடைபெற இருக்கின்றன. அந்த போட்டிகளும் முக்கியமான போட்டிகளாகும்.

தொடக்க ஆட்டங்களில் வெற்றி பெற்றுவிட்டால், இந்திய அணிக்கு பாகிஸ்தானுடன் விளையாடுவது ஒரு போட்டியாகவே இருக்க முடியாது. ஆனால்... இந்த இடத்தில் ஒரு முக்கியமான விஷயத்தை கவனிக்க வேண்டும்.

ஒரு வேளை தொடக்க ஆட்டங்களில் தோல்வியைச் சந்தித்தால், பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி மீது அழுத்தம் அதிகமாகும். அதனால் தொடக்க ஆட்டங்களில் வெற்றி பெறுவது முக்கியம்.

அப்படி வெற்றி பெற்றுவிட்டால், பாகிஸ்தான் அணிக்கு எதிரான உலக கோப்பை சாதனை இந்த முறையும் நிச்சயம் தொடரும். பாகிஸ்தானால் இந்தியாவை ஒரு போதும் உலக கோப்பையால் ஜெயிக்கவே முடியாது.

இந்திய அணியில் வீரர்கள் தேர்வு சிறப்பாக உள்ளது. பேட்டிங், பவுலிங் என அனைத்திலும் சிறப்பாக உள்ளனர். லீக் ஆட்டத்தில் இந்தியா மட்டுமல்ல... எல்லா அணிகளும் 9 போட்டிகளில் விளையாடுகின்றனர். எனவே, வெற்றியுடன் சிறப்பான தொடக்கம் என்பது ரொம்ப முக்கியமான ஒன்று.

இந்த தொடரில் கேப்டன் கோலி முக்கிய வீரராக இருப்பார். தோனியின் பங்கு சொல்ல வேண்டியதில்லை. மிக முக்கியமானதாக இருக்கும். அவர் இந்திய அணிக்காக நிறைய சாதனைகளை புரிந்திருக்கிறார் என்றார்.

Story first published: Saturday, June 1, 2019, 21:51 [IST]
Other articles published on Jun 1, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+