வந்துட்டேனு சொல்லு.. கஷ்டப்பட்டு யோ-யோ டெஸ்டை முடித்த ரெய்னா.. இனி இந்திய டீம்தான்!
டெல்லி: இந்திய அணியில் இடம்பெற செய்யப்படும் தேர்வு முறையான யோ யோ டெஸ்டில் ரெய்னா கலந்து கொண்டுள்ளார். இதோடு அவர் மூன்றாவது முறையாக அந்த டெஸ்டில் கலந்து கொண்டு இருக்கிறார்.
முதல் இரண்டு முறை இந்த தேர்வில் சரியாக பார்பார்ம் செய்யாத ரெய்னா தோல்வியுடன் திரும்பினார். இந்த நிலையில் தற்போது வெற்றிகரமாக அதை முடித்து இருக்கிறார்.
மேலும் இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் சந்தோசமாக போஸ்ட் செய்து இருக்கிறார். தன்னுடைய பயிற்சி புகைப்படங்களையும் அவர் வெளியிட்டு இருக்கிறார்.

யோ யோ டெஸ்ட் என்றால் என்ன
இந்திய அணியில் விளையாட யோ யோ டெஸ்ட் என்ற தேர்வு முறை வைக்கப்படுகிறது. இது மிகவும் கடினம். 20 மீட்டர் இடைவெளியில் உள்ள ஓடுபாதையில் குறிப்பிட்ட கால இடைவெளியில் , கொஞ்சம் கொஞ்சமாக வேகமாக ஓடவேண்டும். ஒவ்வொரு பீப் சத்தம் கேட்கும் போது வேகத்தை அதிகரிக்க வேண்டும். இதில் வெற்றி பெற்று பிட்னஸை நிரூபிப்பது மிகவும் கடினம்.

ரெய்னா தோல்வி
யோ யோ டெஸ்டில் இந்திய அணி வீரர் ரெய்னாவும் சில வாரம் முன் கலந்து கொண்டார். இந்திய அணியில் இடம்பெற முடியாமல் இருந்துவரும் ரெய்னா தன்னுடைய உடல் தகுதியை நிரூபிப்பதற்காக இந்த தேர்வில் கலந்து கொண்டார். ஆனால் அவர் தொடர்ச்சியாக இரண்டு முறை இந்த தேர்வில் சொதப்பினார். இதனால் அவர் இந்திய அணிக்கு திரும்பவே மாட்டார் என்று கூறப்பட்டது.

கடுமையான பயிற்சி
ரெய்னா இதற்காக உடனே தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு சென்று பயிற்சியில் ஈடுபட்டார். 'ஜென்ஸ் பாங்ஸ்போ' என்ற அயர்லாந்து கால்பந்து பயிற்சியாளரை இதற்காக அவர் இந்தியா வரவைத்தார். கடந்த ஒருமாதமாக தீவிர பயிற்சி செய்த ரெய்னா தற்போது யோ யோ டெஸ்டை வெற்றிகரமாக முடித்து இருக்கிறார்.
எல்லோருக்கும் நன்றி
இதுகுறித்து அவர் தனது டிவிட்டரில் பதிவிட்டு இருக்கிறார். '' பல நாள் பயிற்சிக்கு பின் யோ யோ டெஸ்டை வெற்றிகரமாக முடித்துவிட்டேன். பயிற்சியாளர்கள் நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார்கள். எல்லோருக்கும் நன்றி. தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி பெறுவது மிகவும் சிறந்த விஷயம். உங்களுடைய முழு திறமையும் இங்கு வெளிப்படும்'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.


Click it and Unblock the Notifications