Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உங்ககிட்ட இருந்து இதை எதிர்பார்க்கல.. என்ன இந்திய டீமை பார்த்து ரெய்னா இப்படி சொல்லிட்டாரு.. போச்சு

சென்னை: இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்திய அணியின் தேர்வை முன்னாள் வீரர் ரெய்னா விமர்சனம் செய்துள்ளார்.

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி திணறி வருகிறது. 560 ரன்கள் கடந்தும் இங்கிலாந்து அணியை ஆல் அவுட் செய்ய முடியாமல் இந்திய அணி திணறி வருகிறது.

இங்கிலாந்து அணி இன்னும் டிக்ளேர் வேறு செய்யாமல் இருப்பது ஆச்சர்யம் அளித்துள்ளது. 600 ரன்களை எடுக்கும் திட்டத்தில் இங்கிலாந்து உள்ளதோ என்று கேள்வி எழுந்துள்ளது.

சென்னை

சென்னை

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்திய அணியின் தேர்வை கிரிக்கெட் வீரர்கள் பலரும் விமர்சனம் செய்து வருகிறார்கள். முக்கியமாக இந்திய அணியில் நதீம் சேர்க்கப்பட்டது ஏன் என்று கேள்வி எழுப்பி உள்ளனர். அதேபோல் இஷாந்த் சர்மா அணியில் எடுக்கப்பட்டதையும் பலர் விமர்சனம் செய்துள்ளனர்.

அக்சர்

அக்சர்

இந்திய அணியில் அக்சர் பட்டேல் காயம் அடைந்ததால் நதீம் வந்தார். அக்சர் பட்டேலுக்கு எதிராக குல்தீப் யாதவை ஏன் எடுக்கவில்லை என்று பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். கம்பீர் தொடங்கி ஹர்பஜன் வரை பலரும் இதே கேள்வியை எழுப்பி வருகிறார்கள்.

ரெய்னா டிவிட்

இந்த நிலையில் ரெய்னாவும் இந்த ஜோதியில் ஐக்கியம் ஆகியுள்ளார். இது தொடர்பாக ரெய்னா தெரிவித்துள்ள கருத்தில், குல்தீப் யாதவை அணியில் எடுத்து இருக்க வேண்டும். அவர் அணியில் இருந்தால் ஸ்பின் பவுலிங்கில் கூடுதல் வேரியேஷன் காட்டி இருப்பார் என்று ரெய்னா குறிப்பிட்டுள்ளார்.

கருத்து

கருத்து

பொதுவாக இந்திய அணி தேர்வு குறித்து ரெய்னா பேச மாட்டார். யாரையும் விமர்சனம் செய்ய மாட்டார். அணியில் தேர்வாகும் வீரர்களை வாழ்த்த மட்டுமே செய்வார். ஆனால் அவரே தற்போது இந்திய அணி தேர்வை பார்த்து நொந்து போய் விமர்சனம் செய்துள்ளார்.

வைரல்

இந்த நிலையில் ரெய்னாவை சிலர் இதற்காக கிண்டலும் செய்துள்ளனர். இதை உங்களிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை ரெய்னா. நீங்களும் என்ன கமென்டரி செய்ய போகிறீர்களா? ஏன் இப்படி விமர்சனம் செய்கிறீர்கள் என்று கேட்டுள்ளனர்.

Story first published: Sunday, February 7, 2021, 10:28 [IST]
Other articles published on Feb 7, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+