Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இதற்கு மேலும் காத்திருக்க முடியாது.. ஸ்ரீசாந்த் பற்றி திடீரென பேசிய ரெய்னா.. ஒருவேளை இதுதான் காரணமோ!

திருவனந்தபுரம்: இந்திய முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் மீண்டும் ஆட தொடங்கி இருக்கும் ஸ்ரீசாந்திற்கு சிஎஸ்கே வீரர் ரெய்னா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரின் போது சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கூறி ஸ்ரீசாந்த்திற்கு தடை விதிக்கப்பட்டது. ஸ்ரீசாத் மீதான தடை காலம் முடிவிற்கு வந்த நிலையில் மீண்டும் முதல்தர போட்டிகளில் அவர் ஆடி உள்ளார்.

சையது முஸ்டாக் கோப்பை போட்டிக்கான கேரளா அணியில் ஸ்ரீசாத் சேர்க்கப்பட்டுள்ளார். தற்போது வலைப்பயிற்சியில் ஸ்ரீசாத் ஈடுப்பட்டு வருகிறார். வலைப்பயிற்சியில் பவுலிங் செய்து வரும் ஸ்ரீசாத் பெரிய அளவில் கவனம் ஈர்த்துள்ளார்.

சந்தோசம்

சந்தோசம்

இந்த நிலையில் இந்திய முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் மீண்டும் ஆட தொடங்கி இருக்கும் ஸ்ரீசாந்திற்கு சிஎஸ்கே வீரர் ரெய்னா வாழ்த்து தெரிவித்துள்ளார். நீங்கள் மீண்டும் ஆட வருவது சந்தோசம். உங்களுக்கு வாழ்த்துக்கள்.

வாருங்கள்

வாருங்கள்

நீங்கள் மீண்டும் சிறப்பாக பவுலிங் செய்ய வேண்டும். உங்களின் மேஜிக் பவுலிங்கை பார்க்க ஆவலாக இருக்கிறேன். உங்கள் பவுலிங்கை பார்க்க இனியும் காத்திருக்க முடியாது. வாழ்த்துக்கள் என்று ரெய்னா ஸ்ரீசாந்தை வாழ்த்தி உள்ளார். இதற்கு முன்பும் இதேபோல் ஸ்ரீசாந்தை ரெய்னா வாழ்த்தி இருந்தார்.

வாழ்த்து

வாழ்த்து

ஸ்ரீசாந்த் குறித்து இந்திய கிரிக்கெட் வீரர்கள் யாரும் கருத்து தெரிவிக்காத நிலையில் ரெய்னா திடீரென வாழ்த்து தெரிவித்துள்ளார். ஸ்ரீசாந்த் பலமுறை தோனியை கடுமையாக பேசி உள்ளார். தோனியை தல என்று அழைக்க கூடாது என்றும் கூட விமர்சனங்கள் வைத்துள்ளார்.

சண்டை

சண்டை

தோனிக்கு எதிராக தொடர்ந்து பேசி வந்தவர் ஸ்ரீசாந்த். அப்படி இருக்கும் போது தோனிக்கு நெருக்கமான ரெய்னா ஸ்ரீசாந்த் குறித்து இப்படி பேசுவது ஆச்சர்யம் அளிக்கிறது. பொதுவாக ரெய்னா அனைத்து வீரர்களுக்கும் ஆதரவு அளிக்க கூடியவர். மற்ற வீரர்களின் வெற்றியை தன்னுடைய வெற்றிபெற போல கருத கூடியவர் ரெய்னா. ஒருவேளை இந்த நல்ல குணம் காரணமாக ஸ்ரீசாந்தையும் அவர் பாராட்டி இருக்கலாம்.

Story first published: Friday, January 1, 2021, 14:30 [IST]
Other articles published on Jan 1, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+