Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“38 ஆண்டு காத்திருப்பு” 1983ல் கபில் தேவ் படைத்த அதே சாதனை.. U19 உலகக்கோப்பையில் சாதித்த ராஜ் பவா!!

ஆண்டிகுவா: U19 உலகக்கோப்பை வரலாற்றில் கபில் தேவ் செய்த சாதனையை 38 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஒரு இந்திய வீரர் செய்து அசத்தியுள்ளார்.

இந்திய U19 அணி 5வது முறையாக உலகக்கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது.

நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

ராஜ் பவாவின் ஆட்டம்

ராஜ் பவாவின் ஆட்டம்

இதில் இந்திய அணியின் உலகக்கோப்பை வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக இருந்தவர் ராஜ் பவா. இங்கிலாந்து அணிக்கு டாப் ஆர்டர் சரிந்த போதும், மிடில் ஆர்டரில் ஜேம்ஸ் ரேவ், வில் லக்ஸ்டன் அச்சுறுத்தல் தரக்கூடிய வீரர்களாக இருந்தனர். ஆனால் மிடில் ஆர்டர் வீரர்களை அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு வெளியேற்றினார் ராஜ் பவா.

திகைப்பூட்டம் எகானமி

திகைப்பூட்டம் எகானமி

அவர் வீசிய 9.5 ஓவர்களில் 31 ரன்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை சாய்த்தார். அவரின் சராசரி 3.20 என மிகக்குறைவே ஆகும். இதனால் இங்கிலாந்து அணியில் ஓப்பனிங் வீரர் ஜார்ஜ் (27), வில் லக்ஸ்டன் (4), ஜார்ஜ் பெல் (0), ராஹான் அஹ்மது (10), ஜோசுவா பாடடென் (1) என சொற்ப ரன்களுக்கு நடையை கட்டினர்.

சாதனை

சாதனை

இதன் மூலம் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் 5 விக்கெட்டுகளை ( ஃபைபர்) கைப்பற்றி முதல் இந்திய பவுலர் என்ற வரலாற்று சாதனையை படைத்தார். இந்த பட்டியலில் இதற்கு முன்னர் வரை கடந்த 2006ம் ஆண்டு பியூஸ் சாவ்லா 8 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார். 15 ஆண்டுகளுக்கு பிறகு இந்த சாதனை தகர்க்கப்பட்டுள்ளது.

கபில் தேவின் சாதனை

கபில் தேவின் சாதனை

இதுமட்டுமல்லாமல் முன்னாள் இந்திய அணி கேப்டன் கபில் தேவ்-ன் சாதனையிலும் இடம்பெற்றுள்ளார். அதாவது ஐசிசி தொடர்களில் 150+ ரன்களை குவித்தும், ஒரே போட்டியில் 5 விக்கெட்டுகளையும் கைப்பற்றிய 2வது இந்தியர் என்ற சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன்னர் கபில் தேவ் 1983ல் இந்த சாதனையை செய்திருந்தார்.

பேட்டிங்கிலும் ஆச்சரியம்

பேட்டிங்கிலும் ஆச்சரியம்

பவுலிங்கில் கலக்கிய ராஜ் பவா பேட்டிங்கிலும் அனைவருக்கும் ஆச்சரியம் கொடுத்தார். இந்திய அணி 97 / 4 என இக்கட்டான சூழலில் இருந்த போது நிலையான பார்ட்னர்ஷிப் கொடுத்தார். 54 பந்துகளை சந்தித்த அவர் 2 பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸருடன் 35 ரன்களை விளாசினார். இதனால் ராஜ் பவாவிற்கு ஆட்ட நாயகன் விருதும் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

Story first published: Monday, February 7, 2022, 0:01 [IST]
Other articles published on Feb 7, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+