Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இதுலாம் நியாயமா சஞ்சு சாம்சன்.. அடுத்தடுத்து 2 போட்டிகளில் டக் அவுட்.. பாயும் ரசிகர்களின் விமர்சனம்!

சென்னை: ஐபிஎல் தொடரில் தொடர்ந்து அடுத்தடுத்து போட்டியில் டக் அவுட்டாகி ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் வெளியேறியது ரசிகர்களிடையே விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

16வது ஐபிஎல் தொடரின் 17வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்த்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடி வருகிறது. சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில், டாஸ் வென்ற சென்னை கேப்டன் தோனி பந்துவீச்சைத் தேர்வு செய்தார். சென்னை அணி சார்பாக தீக்சனா, ஆகாஷ் சிங், மொயின் அலி ஆகியோர் மீண்டும் சேர்க்கப்பட்டனர். அதேபோல் ராஜஸ்தான் அணியில் ரியான் பராக், போல்ட் நீக்கப்பட்டு தேவ்தத் படிக்கல், குல்தீப் சென் ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.

Rajasthan Captain Sanju samson duck out for Consecutive matches in IPL 2023

இதனைத் தொடர்ந்து ராஜஸ்தான் அணி சார்பாக பட்லர் - ஜெய்ஸ்வால் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. இதில் அதிரடியாக தொடங்கிய ஜெய்ஸ்வால் 8 பந்துகளில் 10 ரன்கள் எடுத்து துஷார் தேஷ்பாண்டே பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனைத் தொடர்ந்து சஞ்சு சாம்சன் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென தேவ்தத் படிக்கல் களமிறக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து ராஜஸ்தான் அணி அதிரடியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றது. இதன் காரணமாக பவர் பிளே ஓவர்கள் முடிவில் அந்த அணி, 57 ரன்கள் சேர்த்தது.

பின்னர் கேப்டன் தோனி, ஜடேஜா மற்றும் மொயின் அலியை அட்டாக்கில் கொண்டு வந்தார். அதில் மொயின் அலி வீசிய ஓவரில் பட்லர் அடுத்தடுத்து இரு சிக்சர்களை பறக்கவிட்டதால், ராஜஸ்தான் அணியின் ஸ்கோர் 8 ஓவர்கள் முடிவில் 86 ரன்களாக உயர்ந்தது. இந்த நிலையில் மீண்டும் பந்து ஜடேஜாவின் கைகளுக்கு சென்றது. அந்த ஓவரின் 3வது பந்தில் படிக்கல் 26 பந்துகளில் 38 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, பின்னர் சஞ்சு சாம்சன் களமிறங்கினார். இதனால் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு எழுந்தது.

ஆனால் எதிர்பார்ப்புக்கு மாறாக சஞ்சு சாம்சன் ஜடேஜா வீசிய பந்தில் ரன் ஏதும் எடுக்காமல் போல்டாகி வெளியேறினார். இதனால் ராஜஸ்தான் அணி 88 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஐதராபாத் அணிக்கு எதிரான முதல் போட்டியில் 55 ரன்கள் குவித்த சஞ்சு சாம்சன், பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் 42 ரன்கள் சேர்த்து அசத்தி இருந்தார். ஆனால் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் டக் அவுட்டான சஞ்சு சாம்சன், மீண்டும் சென்னை அணிக்கு எதிரான போட்டியிலும் டக் அவுட்டானது ரசிகர்களிடையே விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாகவே இந்திய அணியில் சஞ்சு சாம்சன் சேர்க்கப்படவில்லை என்றும் சில விமர்சனங்கள் எழுந்துள்ளது.

Story first published: Wednesday, April 12, 2023, 20:43 [IST]
Other articles published on Apr 12, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+