For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐபிஎல் பிளே ஆப் வாய்ப்பு... பெங்களூர் நழுவ விட்டது... கெட்டியாக பிடித்தது ராஜஸ்தான்!

ஐபிஎல் சீசன் 11ன் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை பெங்களூர் அணி இழந்தது. வாய்ப்பை தக்க வைத்தது ராஜஸ்தான்.

Recommended Video

பிளே ஆப் சுற்றை தக்கவைத்தது ராஜஸ்தான். பெங்களூரு வெளியேறியது-வீடியோ

ஜெய்ப்பூர்: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை 30 ரன்களில் வென்று பிளே ஆப் வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது ராஜஸ்தான் ராயல்ஸ், அதே நேரத்தில் பெங்களூர் அணிக்கு இனி வாய்ப்பே இல்லை.

ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் 11வது சீசன் நடந்து வருகிறது. நாளையுடன் லீக் சுற்று ஆட்டங்கள் முடிவடைகின்றன. ஜெய்ப்பூரில் இன்று நடந்த 53வது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதின.

Rajasthan clinched opportunity of chance for play off

ஏற்கனவே, சன் ரைசர்ஸ் ஹைதராபாத், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. இன்றைய ஆட்டத்தில் வென்றால்தான் பிளே ஆப் சுற்று முன்னேறுவதற்கான வாய்ப்பு கிடைக்கும் நிலையில் பெங்களூர் மற்றும் ராஜஸ்தான் இருந்தன.

முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்தது. ராகுல் திரிபாதி ஆட்டமிழக்காமல் 80 ரன்கள் எடுத்தார். கேப்டன் ரஹானே 33 ரன்கள் எடுத்தார். பெங்களூரின் உமேஷ் யாதவ் இந்த ஆட்டத்திலும் அபாரமாக பந்து வீசி, 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

வலுவான தொடக்க பேட்டிங் வரிசை உள்ள பெங்களூர் 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 134 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. டிவில்லியர்ஸ் 53 ரன்களும், பார்த்திவ் படேல் 33 ரன்களும் எடுத்தனர். ராஜஸ்தானின் ஸ்ரேயாஸ் கோபால் 4 விக்கெட்களை வீழ்த்தினார்.

இதன் மூலம் 30 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் வென்றது. 14 புள்ளிகளைப் பெற்று புள்ளிப் பட்டியலில் நான்காவது இடத்துக்கு முன்னேறியது. பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பையும் பெற்றுள்ளது. மீதமுள்ள 3 லீக் ஆட்டங்களின் முடிவில்தான், எந்தெந்த அணிகள் முன்னேறுகின்றன என்பது தெரிய வரும். இந்த நிலையில், டெல்லிக்கு அடுத்ததாக, பிளே ஆப் வாய்ப்பை பெங்களூர் அணி இழந்துள்ளது.

Story first published: Saturday, May 19, 2018, 21:28 [IST]
Other articles published on May 19, 2018
English summary
Rajasthan beats bangalore and kept its chance for play off.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+