RR vs RCB:கொஞ்சம் நிதானம்... கொஞ்சம் பொறுமை... 159 ரன்களை நோக்கி முன்னேறும் ராஜஸ்தான்
ஜெய்பூர்:பெங்களூர் அணிக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் ரகானே, பட்லர் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ரகானே 22 ரன்களில் வெளியேறினார்.
ஐபிஎல் தொடர் முக்கியமான ஆட்டத்தில் பெங்களூர் அணியும், ராஜஸ்தானும் களம் கண்டன. ஜெய்பூரில் நடைபெற்ற இந்த போட்டியில் ராஜஸ்தான் டாஸ் வென்றது. பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது.
இதையடுத்து, பெங்களூர் அணி முதலில் களம் இறங்கியது. முதலில் நிதானம், கொஞ்சம் சொதப்பல், இறுதிக்கட்டத்தில் அதிரடி என 20 ஓவர்களில் பெங்களூர் அணி ஒரு வழியாக 158 ரன்களை குவித்தது. பார்த்தீவ் படேல் 67 ரன்கள் எடுத்தார்.

ரகானே, பட்லர்
159 ரன்கள் வெற்றி இலக்கு எளிதான ஒன்று என்று பார்க்கப்பட்ட போதிலும் ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் ரகானேவும், மன்கட் பலிகடா ஜாஸ் பட்லரும் களம் இறங்கினர்.

பொறுப்பான ஆட்டம்
இருவரும் மிக நேர்த்தியாக ஆடினர். பந்துவீச்சாளர்களின் தவறான பந்துகளை சரியாக தேர்ந்தெடுத்து அவர்கள் பொறுப்பாக ஆடினர். எந்த முறையிலும் அவர்களை பிரிக்க முடியாததால் பெங்களூர் அணி என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறியது.

ஆட்டமிழந்தார் ரகானே
ஒரு வழியாக 8வது ஓவரில் பலன் கிடைத்தது. சாஹல் வீசிய பந்தை அடிக்க முற்பட்டார் ரகானே. ஆனால் பந்து கால்காப்பில் பட எல்பிடபிள்யூ முறையில் ஆட்டம் இழந்தார்.

பட்லர் அரைசதம்
பெங்களூர் அணிக்கு அவரின் விக்கெட் முதல் பிரேக் கொடுத்தது. அதன் பிறகு 2வது விக்கெட்டுக்கு கை கோர்த்தார் ஸ்மித். இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். மெதுவாக ரன் ரேட்டும் உயர்ந்தது. சிறப்பாக ஆடிய பட்லர் அரை சதம் கடந்தார்.

யாருக்கு வெற்றி?
இந்த போட்டியில் வெற்றி என்று முக்கியம் என்று கருதப்பட்ட நிலையில் ஜாஸ் பட்லர் ஆட்டமிழந்தார். இந்த முறை அவரை வெளியேற்றியது சாஹல். அவரின் பந்தை அடித்த பட்லர், ஸ்டோனிசிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இரு அணிகளும் நிதானமாக இருப்பதால் வெற்றி யாருக்கு என்பது கணிக்க முடியாத ஒன்றாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications