Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தல தோனியின் அருகில் இருக்கும் இந்த சின்ன பையன் யார்…? இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

ஜெய்பூர்: ராஜஸ்தான் அணியின் அறிமுக வீரர் ரியான் பராக், சிறுவனாக இருந்த போது தல தோனியுடன் இருந்த போது எடுத்த படம் இணையத்தில் தாறுமாறாக வைரலாகி வருகிறது.

ஐபிஎல் தொடரில் மறக்க முடியாத போட்டி என்றால் அது ராஜஸ்தான், சென்னை அணிகளுக்கு இடையேயான போட்டி தான் என்று அடித்துச் சொல்லலாம். அந்தளவுக்கு அனைவரும் பேசும்படியாக அந்த போட்டி வைத்து விட்டது.

ஒரு ஓவரில் வீசப்பட்ட நோபால்.. சர்ச்சையாகி கூல் கேப்டன் தோனியே.... நடுவரிடம் மல்லுக்கு நிற்கும் நிலைமையை உருவாக்கிவிட்டது. அதற்கான ஆளுக்கு ஒரு பக்கம் நின்று கொண்டு தோனியை பாராட்டியும்,தூற்றியும் வருகிறது.

பைன் போதாது

பைன் போதாது

நடுவரிடம் சண்டை போட்டதற்காக, தோனிக்கு 50 சதவீதம் பைன் போட்டது ஐபிஎல் நிர்வாகம். அந்த பைன் போதாது என்று முன்னாள் வீரர்களும் தம் பங்குக்கு கொதித்து எழுந்தனர்.

சுவாரசிய சம்பவம்

இந்நிலையில் அந்த போட்டியின் போது நடந்த சுவாரசிய சம்பவம் தற்போது வைரலாகி உள்ளது. அந்த போட்டியின் முடிவில் சமூக வலைதளங்களில் ஒரு புகைப்படம் வலம் வந்தது.

ஸ்டைல் சிறுவன்

ஸ்டைல் சிறுவன்

அந்த புகைப்படத்தில் தோனி நின்று கொண்டிருக்கிறார். அவருடன் 8 வயது சிறுவனும் நின்று கொண்டிருக்கிறார். இருவரும் ஸ்டைலாக அந்த போட்டோவில் தெரிகின்றனர். இந்த போட்டோ 2010ம் ஆண்டு எடுக்கப்பட்டது.

தோனியுடன் போட்டோ

தோனியுடன் போட்டோ

இப்போது அந்த போட்டோவுக்கு, அருகில் வேறு ஒரு போட்டோ வைக்கப்பட்டு உள்ளது. அந்த போட்டோ... ராஜஸ்தான் அணியுடனான போட்டியின் போது எடுக்கப்பட்டது. அதில் தோனியுடன் இளைஞர் ஒருவர் நிற்கிறார். ரியான் பாரக் என்பவர் அந்த இளைஞர் தான் கூறப்பட்டுள்ளது.

அறிமுக வீரர் பராக்

அறிமுக வீரர் பராக்

8 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்டுள்ள புகைப்படத்தில் இருக்கும் சிறுவன் பராக் தான்.. இப்போது ராஜஸ்தான் போட்டியில் அறிமுக வீரராக களம் இறங்கி உள்ளார். முதல் போட்டியில் விளையாடும் முன்பாக தோனியை சந்தித்து ஆசி பெற்றுள்ளார்.

இணையத்தில் வைரல்

இணையத்தில் வைரல்

கிட்டத்தட்ட 8 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட அந்த புகைப்படமும், தற்போதைய புகைப்படமும் இணையத்தில் வைரலாகி உள்ளது. தோனியின் ரசிகர்கள் பராக்குக்கு பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.

Story first published: Saturday, April 13, 2019, 13:35 [IST]
Other articles published on Apr 13, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+