For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

SRH VS RR:வாவ்... ! அடுத்தடுத்து அரைசதம் கடந்த ரகானே, சாம்சன்... பவுலிங்கில் சொதப்பும் சன் ரைசர்ஸ்

ஹைதராபாத்:சன் ரைசர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 2வது விக்கெட்டுக்கு கைகோர்த்த ரகானேவும், சாம்சனும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று ஹைதராபாத்தில் நடைபெறும் போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரிட்சை நடத்த உள்ளது. இரு அணிகளுமே வெற்றி கணக்கை துவக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.

போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் காயத்தில் இருந்து குணமடைந்து இன்றைய போட்டியில் களமிறங்கியுள்ளார்.

SRH VS RR: ராஜஸ்தான் பேட்டிங்.. பவுண்டரியுடன் தொடங்கிய பட்லர்.. ரஷித் பந்தில் கிளீன் போல்டு SRH VS RR: ராஜஸ்தான் பேட்டிங்.. பவுண்டரியுடன் தொடங்கிய பட்லர்.. ரஷித் பந்தில் கிளீன் போல்டு

தொடக்கம்

தொடக்கம்

ராஜஸ்தான் அணியின் துவக்க வீரர்களாக ரகானேவும், பட்லரும் களம் இறங்கினர். முதல் ஓவரில் வெறும் 3 ரன்களை மட்டுமே எடுத்தது. 2வது ஓவரிலும் 7 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த ஓவரிலும் தமது ரன் கணக்கை துவங்காமல் தான் இருந்தார் பட்லர்.

பவுண்டரி, போல்டு

பவுண்டரி, போல்டு

அதுவரை ரன் ஏதும் எடுக்காமல் இருந்த பட்லர் பவுண்டரியை அடுத்து தமது ரன் கணக்கை துவங்கினார். அந்த மகிழ்ச்சி சில நிமிடங்கள் கூட நீடிக்கவில்லை. 4வது ஓவரை ரஷித் கான் வீசினார். அந்த ஓவரின் 2வது பந்தில் என்ன நடந்தது என்றே பட்லரால் ஊகிக்க முடியவில்லை.

ரசிகர்கள் ஆர்வம்

ரசிகர்கள் ஆர்வம்

போல்டாகி வெளியேறி, ரசிகர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார். அவரை தொடர்ந்து, 2வது விக்கெட்டுக்கு ரகானேவுடன் சஞ்சு சாம்சன் கை கோர்த்தார். அணியின் ரன்விகிதம் 6 என்ற அடிப்படையில் இருக்கிறது. இருவரும் நிதானமாக அதே சமயத்தில் அருமையாக பந்துகளை எதிர்கொண்டனர். சன் ரைசர்ஸ் பந்துவீச்சை சமயம் கிடைக்கும் போதெல்லாம் எல்லைக்கு அப்பால் அனுப்பினர்.

12வது ஓவரில் 100

12வது ஓவரில் 100

முதல் 50 ரன்களை 8வது ஓவரிலும், 100 ரன்களை 12வது ஓவரிலும் இருவரும் எட்டினர். அந்த ஜோடியை பிரிக்க ஹைதராபாத் செய்த மாயம் ஒன்றும் பலிக்கவில்லை.ரன்கள் வந்து கொண்டே இருந்தன.

ரகானே, சாம்சன் அரைசதம்

ரகானே, சாம்சன் அரைசதம்

தொடக்க வீரராக களம் இறங்கிய ரகானே அரை சதம் கடந்து அணிக்கு வலு சேர்த்தார். அவருக்கு அடுத்தபடியாக சாம்சனும் அரை சதம் கடக்க.. ராஜஸ்தான் அணிக்கோ ஏக உற்சாகம்.

Story first published: Friday, March 29, 2019, 21:53 [IST]
Other articles published on Mar 29, 2019
English summary
Rajasthan royal scores runs and rahane, Samson scored 50 runs.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X