“அஸ்வின் குறித்து இப்படியா சொல்றது?”.. ராஜஸ்தான் அணி தந்த தரமான பதிலடி.. ரசிகர்கள் வியப்பு!
மும்பை: ரவிச்சந்திரன் அஸ்வின் குறித்து பரவிய விமர்சனங்களுக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தரமான பதிலடியை கொடுத்துள்ளது.
2023ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் வரும் டிசம்பர் 23ம் தேதி நடைபெறும் என அறிவித்துள்ளனர். இதற்காக அனைத்து அணிகளும் நேற்று தாங்கள் தக்கவைக்கப்போகும் வீரர்களின் பட்டியலை வெளியிட்டன.
இதில் பல்வேறு சீனியர் வீரர்கள், வயதின் காரணமாக ஓய்வு அல்லது நீக்கப்பட்டது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக கெயீரன் பொல்லார்ட், பிராவோ ஆகியோரை இனி ஐபிஎல்-ல் பார்ப்போமா ? ரசிகர்கள் சோகமடைந்தனர்.

குவியும் விமர்சனங்கள்
இதில் இருந்து தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் மட்டும் எப்படி தப்பித்தார் என சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர். 36 வயதாகும் அஸ்வின் சமீபத்தில் தான் டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாடினார். ஆனால் இவர்களின் திட்டங்கள் இனி டி20ல் எடுபடாது எனக்கூறி, ராஜஸ்தான் அணி கழட்டிவிடப்படும் என ரசிகர்கள் கூறி வந்தனர்.

பதிலடி
இந்நிலையில் இதற்கு ராஜஸ்தான் அணி பதிலடி கொடுத்துள்ளது. அஸ்வினின் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள, அந்த அணி நாங்கள் அப்படி செய்வோம் என எப்படி எதிர்பார்த்தீர்கள்? என குறிப்பிட்டுள்ளது. இதனால் அவர் அடுத்தாண்டு ஐபிஎல் தொடரிலும் ராஜஸ்தான் அணிக்காக விளையாடுவது உறுதியாகியுள்ளது.

செயல்பாடு
கடந்தாண்டு நடைபெற்ற மெகா ஏலத்தின் போது அஸ்வினை ரூ.5 கோடி கொடுத்து ராஜஸ்தான் அணி வாங்கியது. அந்த அணிக்காக 17 போட்டிகளில் ஆடிய அஸ்வின் 12 விக்கெட்களை வீழ்த்தினார். அவரின் சராசரி 7.51 ரன்கள் மட்டுமே ஆகும். பேட்டிங்கில் 12 இன்னிங்ஸ்களில் 191 ரன்களை அடித்திருந்தார். இதில் ஒரு அரைசதமும் அடங்கும்.

அதிரடி பேட்ஸ்மேன்
நடந்துமுடிந்த டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் முதன்மை பவுலராக ரவிச்சந்திரன் அஸ்வின் தான் இருந்தார். 6 போட்டிகளில் விளையாடிய அவர் 6 விக்கெட்களை கைப்பற்றியிருந்தார். எனினும் பேட்டிங்கில் ஒரு ஃபினிஷரை போலவே அதிரடி காட்டியது ரசிகர்களுக்கு விருந்து படைத்தது.


Click it and Unblock the Notifications