Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டெக்கான் சார்ஜர்ஸை 2 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது ராஜஸ்தான்

நாக்பூர்: நாக்பூரில் நடந்த திரில்லான போட்டியில், 2 ரன்கள் வித்தியாசத்தில் டெக்கான் சார்ஜர்ஸ் அணியை வீழ்த்தியது ராஜஸ்தான் ராயல்ஸ்.

டெக்கான் சார்ஜர்ஸ் அணியும், ராஜஸ்தானும் நேற்று நாக்பூரில் நடந்த ஐபிஎல் போட்டியில் சந்தித்தன. படு விறுவிறுப்பாக நடந்த இந்தப் போட்டியில் ராஜஸ்தான் அசத்தலான வெற்றியைப் பெற்றது.

முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ், 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 159 ரன்கள் எடுத்தது.

ராஜஸ்தான் அணியில் வாட்சன் சிறப்பாக ஆடி 56 ரன்களைக் குவித்தார். ஓஜாவின் பங்கு 36 ரன்களாகும். ஆர்.பி.சிங் சிறப்பாக பந்து வீசி 3 விக்கெட்களைச் சாய்த்தார்.

பின்னர் ஆட வந்த ராஜஸ்தான் அணிக்கு கில்கிறைஸ்ட் நல்ல தொடக்கத்தைக் கொடுத்தார். 17 பந்துகளைச் சந்தித்த அவர் 34 ரன்களைக் குவித்து ஆட்டமிழந்தார். லட்சுமண் 6 ரன்களுடன் பெவிலியன் திரும்பினார்.

ரோஹித் சர்மா அட்டகாசமாக ஆடி அணியை வெற்றிக்கு அருகில் வரை கொண்டு சென்றார். 44 பந்துகளில் அதிரடியாக ஆடி 73 ரன்களைக் குவித்தார்.

ஆனால் இந்த சமயத்தில்தான் திரிவேதி ரூபத்தில் ஹைதராபாத் அணிக்கு ஆபத்து வந்த்து. அதிரடியாக ஆடிக் கொண்டிருந்த சர்மாவை அவுட் செய்தார் திரிவேதி. அது டெக்கான் அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. கூடவே, ராஜஸ்தான் கேப்டன் ஷான் வார்னேவும் அபாரமாக பந்து வீசி நான்கு விக்கெட்களை சாய்த்தார்.

இருவரும் இணைந்து டெக்கான் அணியின் கடைசி நிலை வீரர்களை முறித்துப் போடவே அதே 19.5 ஓவர்களில் 157 ரன்களை மட்டுமே எடுத்து ஆட்டமிழந்த்து டெக்கான் சார்ஜர்ஸ்.

வெற்றியின் விளிம்பு வரை வந்த டெக்கான் 2 ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தானிடம் பரிதாபமாக தோல்வியைத் தழுவியது.

டெக்கான் அணியின் தலைவிதியை மாற்ற திரிவேதியின் அபாரமான பந்து வீச்சுதான் முக்கியக் காரணம். அவர் எடுத்த விக்கெட்கள் 3 ஆகும். டோல் 2 விக்கெட்களைச் சாய்த்தார்.

இந்த வெற்றி ராஜஸ்தானுக்குக் கிடைத்த 5வது வெற்றியாகும். கடைசிப் போட்டியில் சென்னையிடம் தோற்றிருந்தது ராஜஸ்தான். இருப்பினும் அடுத்த போட்டியில் அட்டகாசமான வியூகத்தால் அணிக்கு வெற்றி தேடிக் கொடுத்து விட்டார் வார்னே.

டெக்கான் அணிக்கு இது 6வது தோல்வியாகும். தற்போது புள்ளிகள் வரிசையில், 7வது இடத்தில் உள்ளது டெக்கான்.

Story first published: Wednesday, December 7, 2011, 18:37 [IST]
Other articles published on Dec 7, 2011
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+