பஞ்சாபை 31 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராஜஸ்தான்
மொஹாலி: மொஹாலியில் நேற்று இரவு நடைபெற்ற ஐபிஎல் மோதலில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணியை 31 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
முதலில் பேட் செய்த ராஜஸ்தான் அணி ஆடம் வோக்ஸ் மற்றும் பயஸ் பசலின் அபாரமான ஆட்டத்தால் நல்ல ஸ்கோரை எட்ட முடிந்தது.
வோக்ஸ் அவுட் ஆகாமால் 45 ரன்களைக் குவித்தார். பயஸின் பங்கு 45 ஆகும்.மேலும் மைக்கேல் லம்ப் 41 ரன்கள் குவித்துக் கொடுத்தார்.
இதன் மூலம் ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 183 ரன்களைக் குவித்தது.
பின்னர் ஆடத் தொடங்கிய பஞ்சாப் அணியை தனது பந்து வீச்சால் சிதறடித்து விட்டது ராஜஸ்தான். ஷான் வார்னே வகுத்த பந்து வீச்சு மற்றும் பீல்டிங் வியூகம், ராஜஸ்தான் அணிக்கு நல்ல பலனைத் தந்தது.
இதனால் 19.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்த பஞ்சாப் 152 ரன்கள் மட்டுமே எடுத்தது.
மீண்டும் முக்கிய வீரர்கள் பஞ்சாப் அணிக்குக் கை கொடுக்க தவறி விட்டனர். கேப்டன் சங்கக்காரா 29 ரன்களும், ரவி போபரா 25 ரன்களும், மன்வீந்தர் பிஸ்லா 35 ரன்களும் எடுத்தனர்.
இந்தத் தொடரில் ராஜஸ்தான் அணி பெறும் 2வது வெற்றி இது.


Click it and Unblock the Notifications