Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ராஜஸ்தான் ராயல்ஸ் -சிஎஸ்கே அதிரடி போட்டி.. ஜோஸ் பட்லர் விளையாட மாட்டாராம்

ஷார்ஜா : இங்கிலாந்து வீரர் ஜோஸ் பட்லர் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரை முடித்துக் கொண்டு தற்போது யூஏஇயில் தன்னுடைய குடும்பத்தினருடன் குவாரன்டைனில் ஈடுபட்டுள்ளார்.

இதனால் நாளை ஷார்ஜாவில் நடைபெறவுள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டியில் அவர் பங்கேற்க மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Rajasthan Royals -CSK match -Jos Buttler to miss the game

ராஜஸ்தான் ராயல்சின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பேசிய அவர், தன்னுடைய குடும்பத்தினரை உடன் அழைத்துவர அனுமதித்த அணி நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.

ஐபிஎல்லின் இந்த சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சார்பில் களமிறங்கவுள்ள இங்கிலாந்து வீரர் ஜோஸ் பட்லர் ஆஸ்திரேலிய தொடரை முடித்துக் கொண்டு தற்போது யூஏஇயில் குவாரன்டைனில் உள்ளார். அவர் தன்னுடைய குடும்பத்தினருடன் இந்த குவாரன்டைனில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் நாளை ஷார்ஜாவில் நடைபெறவுள்ள சிஎஸ்கேவிற்கு எதிரான அணியின் முதல் போட்டியில் அவர் பங்கேற்க மாட்டார் என்று அவர் கூறியுள்ளார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பேசிய அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும் தன்னுடைய குடும்பத்தினரை உடன் அழைத்துவர அனுமதித்த நிர்வாகத்தினருக்கும் அவர் நன்றி தெரிவித்துக் கொண்டார். தொடர்ந்து பேசிய அவர் டாப் ஆர்டரில் விளையாடவே தான் விரும்புவதாகவும் ஆயினும் எந்த இடத்தில் இறங்கினாலும் விளையாட தயாராக உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

Story first published: Monday, September 21, 2020, 14:15 [IST]
Other articles published on Sep 21, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+