For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ராஜஸ்தான் ராயல்ஸ் தலைமைப் பயிற்சியாளர் பதவியிலிருந்து ராகுல் டிராவிட் விலகல்.. என்ன நடந்தது?

ஜெய்ப்பூர்: இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் ராகுல் டிராவிட் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகியுள்ளார். கேப்டன் சஞ்சு சாம்சன் அணியை விட்டு வெளியேற விரும்புவதாகச் செய்திகள் பரவி வரும் நிலையில், ராகுல் டிராவிட்டின் இந்த திடீர் விலகல், ராஜஸ்தான் அணிக்குள் பெரும் குழப்பம் நிலவுவதை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. இது ஐபிஎல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் ஒரு நிகழ்வாக மாறி உள்ளது.

சனிக்கிழமை (ஆகஸ்ட் 30) அன்று ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்வாகம் இந்தச் செய்தியை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. 2026 ஐபிஎல் சீசனுக்கு முன்பாக, டிராவிட் தனது பதவிக் காலத்தை முடித்துக் கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஒரு விரிவான பொறுப்பை ஏற்கும்படி டிராவிட்டிடம் நிர்வாகம் கேட்டுக்கொண்டதாகவும், ஆனால் அவர் அதை மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

Rajasthan Royals in Turmoil Rahul Dravid Steps Down as Head Coach Sanju Samson s Future in Doubt

ராகுல் டிராவிட்டின் குறுகிய காலப் பயணம்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் முன்னாள் கேப்டனாகவும், பயிற்சியாளராகவும் இருந்த ராகுல் டிராவிட், செப்டம்பர் 6, 2024 அன்று மீண்டும் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். ஆனால், அவரது இரண்டாவது வருகை ஒரு வருடத்திற்குள் முடிவுக்கு வந்துள்ளது. 2025 ஐபிஎல் தொடரில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ப்ளே-ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறாமல் வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

சஞ்சு சாம்சனின் வெளியேற்றமும், டிராவிட்டின் விலகலும்

ராகுல் டிராவிட்டின் விலகல், ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனின் எதிர்காலம் குறித்து வெளியாகி வரும் செய்திகளை மேலும் வலுப்படுத்தியுள்ளது. சஞ்சு சாம்சன், ராஜஸ்தான் அணியிலிருந்து வெளியேறி, சென்னை சூப்பர் கிங்ஸ் போன்ற அணிகளுடன் இணைய விரும்புவதாகத் தொடர்ந்து செய்திகள் வெளியாகி வருகின்றன.

இந்தச் சூழலில், அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் விலகியிருப்பது, சாம்சனின் முடிவில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனவே, ராகுல் டிராவிட் - சஞ்சு சாம்சன் இடையே அணியில் முக்கிய முடிவுகளை எடுப்பதில் கருத்து வேறுபாடு இருந்ததாக கூறப்படுகிறது.

புதிய கேப்டன்?

மேலும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் அடுத்த கேப்டனாக ஜெய்ஸ்வால் அல்லது ரியான் பராக் நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இப்படி சஞ்சு சாம்சனை சுற்றி பல்வேறு செய்திகள் வெளியான நிலையில் ராகுல் டிராவிட் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை விட்டு விலகி இருக்கிறார்.

அந்த அணியின் முக்கியத் தூண்களான கேப்டனும், பயிற்சியாளரும் ஒரே நேரத்தில் அணியில் அதிருப்தியில் இருப்பது, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகத்தில் பெரும் மாற்றங்கள் நிகழ இருப்பதற்கான அறிகுறியாகவே பார்க்கப்படுகிறது. தலைமைப் பயிற்சியாளர் பதவியிலிருந்து டிராவிட் விலகிய நிலையில், சஞ்சு சாம்சன் அணியில் நீடிப்பாரா, இல்லை வெளியேறுவாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Story first published: Saturday, August 30, 2025, 14:09 [IST]
Other articles published on Aug 30, 2025
English summary
Rajasthan Royals in Turmoil: Rahul Dravid Steps Down as Head Coach, Sanju Samson's Future in Doubt
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+