For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இத்தனை நாளா திறமையை ஒளித்து வைத்த ராஜஸ்தான்... பஞ்சாபுக்கு எதிராக அபார வெற்றி!

ஐபிஎல் போட்டிகளில் மிகவும் வலுவான பஞ்சாப் அணியுடன் தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வரும் ராஜஸ்தான் அணி மோதுகின்றது.

Recommended Video

பஞ்சாப் – இராஜஸ்தான் அணிகள் இன்று மோதல்- வீடியோ

ஜெய்ப்பூர்: ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் 40வது ஆட்டத்தில் மிகவும் சுலபமான இலக்கை கொடுத்தும், பஞ்சாபை அணியை வெச்சி செஞ்சது ராஜஸ்தான் அணி. 15 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் வென்றது. பஞ்சாபின் ராகுல் கடைசி வரை போராடி 95 ரன்கள் எடுத்தும் வெற்றி பெற முடியவில்லை.

ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் 11வது சீசன் மிகவும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதுவரை 39 ஆட்டங்கள் முடிந்துள்ளன.

1
43450

இந்த சீசனின் 40வது ஆட்டம் ஜெய்ப்பூரில் இன்று நடந்தது. இதில் புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், மூன்றாவது இடத்தில் உள்ள பஞ்சாப் அணியும் மோதின.

ஐபிஎல் முதல் சீசனின் சாம்பியனான ராஜஸ்தான் அணி, இந்த சீசனில் துவக்கம் முதலே திணறி வருகிறது. இதுவரை 3 வெற்றிகளை மட்டும் பெற்றுள்ளது. 6 ஆட்டங்களில் தோல்வி அடைந்துள்ளது. தொடர்ந்து மூன்று தோல்விகளை சந்தித்துள்ள நிலையில் களமிறங்கியுள்ளது.

மீண்டும் மோதுகின்றன

மீண்டும் மோதுகின்றன

நேற்று முன்தினம் இந்தூரில் நடந்த ஆட்டத்தில் இரு அணிகளும் விளையாடின. அதில் பஞ்சாப் அணி அபாரமாக வென்றது. இரண்டாவது முறையாக மீண்டும் மோதின. தற்போது சொந்த மண்ணில் விளையாடுவதால் வெற்றியை எதிர்பார்த்து ராஜஸ்தான் களமிறங்கியது.

வெற்றிக்காக போராட்டம்

வெற்றிக்காக போராட்டம்

பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை தக்க வைக்க ராஜஸ்தான் கடுமையாக போராட வேண்டியுள்ளது. குறைந்தபட்சம் தொடர் தோல்விகளை தவிர்ப்பதுடன், புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தை தவிர்க்க, மற்றொரு வெற்றி அதற்கு தேவை.

158 ரன்கள் குவிப்பு

158 ரன்கள் குவிப்பு

ஜெய்ப்பூரில் நடந்த ஆட்டத்தில் டாஸை வென்ற ராஜஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் சேர்த்தது. ஜோஸ் பட்லர் 58 பந்துகளில் 82 ரன்கள் விளாசினார். சஞ்சு சாம்சன் 22 ரன்கள் எடுத்தார். பஞ்சாபின் ஆன்ட்ரூ டை கடைசி ஓவரில் மூன்று விக்கெட்கள் உள்பட நான்கு விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார். முஜீபுர் ரஹ்மான் 2 விக்கெட்களை வீழ்த்தினார்.

பஞ்சாபுக்கு அதிர்ச்சி

பஞ்சாபுக்கு அதிர்ச்சி

20 ஓவர்களில் 159 ரன்கள் தேவை என்ற நிலையில், பஞ்சாப் அணி பேட்டிங் செய்தது. ராஜஸ்தானின் பந்து வீச்சு அபாரமாக இருந்தது. பஞ்சாப் அணியின் விக்கெட்களை தொடர்ந்து வீழத்தியது. ஒரு பக்கம் துவக்க ஆட்டக்காரராக களமிறங்கிய லோகேஷ் ராகுல், கடைசி வரை நின்று 70 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 95 ரன்கள் எடுத்தார். ஆனால் மற்ற 9 பேரும் சேர்ந்து 41 ரன்கள் மட்டுமே எடுத்தணர். அதில் மார்கஸ் ஸ்டோனிஸ் மட்டுமே 11 ரன்கள் எடுத்தார். மற்றவர்கள் ஒற்றை இலக்கத்தில் அவுட்டாயினர்.

கடைசியில் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 143 ரன்களுக்கு பஞ்சாப் அவுட்டானது. இந்த வெற்றியைத் தொடர்ந்து ராஜஸ்தான் அணி 8 புள்ளிகளுடன் 6வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

Story first published: Wednesday, May 9, 2018, 9:05 [IST]
Other articles published on May 9, 2018
English summary
Rajasthan royals looking for another win in the IPL, to face formidable KXIP.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+