ராஜஸ்தானின் ஹாட்ரிக் வெற்றி கனவு முறியடிப்பு.... கொல்கத்தாவுக்கு மூன்றாவது வெற்றி
Recommended Video

ஜெய்ப்பூர்: ஐபிஎல் டி-20 கிரிக்கெட் தொடரில் இன்று நடந்த ஆட்டத்தில் கொல்கத்தா அணி டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 160 ரன்களுக்கு சுருண்டது. பின்னர் ஆடிய கொல்கத்தா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. கேப்டன் தினேஷ் கார்த்திக் அபாரமாக விளைடியாக ஆட்டமிழக்காமல் 42 ரன்கள் அடித்து அணிக்கு மூன்றாவது வெற்றியை தேடித் தந்தார்.
ஐபிஎல் டி-20 கிரிக்கெட் தொடர் 11வது சீசன் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் நடக்கும் இந்த சீசனின் 15வது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின.
இதுவரை நடந்துள்ள 14 ஆட்டங்களின் முடிவில் ஐதராபாத் அணி 3 போட்டிகளில் 3 வெற்றிகளுடன் முதலிடத்தில் உள்ளது. கொல்கத்தா 4 போட்டிகளில் 2 வெற்றி பெற்று, 4 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளது. ராஜஸ்தான் அணி 3ல் 2ல் வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன் 5வது இடத்தில் உள்ளது.
அஜங்யா ரஹானே தலைமையிலான ராஜஸ்தான் அணி, ஐதராபாத் அணிக்கு எதிரான முதல் ஆட்டத்தில் தோல்வி அடைந்தது. மழையால் பாதிக்கப்பட்ட டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் வென்றது. பெங்களூருவுக்கு எதிரான ஆட்டத்திலும் வென்றது. தொடர்ந்து மூன்றாவது வெற்றியை எதிர்நோக்கி களமிறங்குகிறது.

வெற்றியை எதிர்பார்க்கும் கொல்கத்தா
தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணி முதல் ஆட்டத்தில் பெங்களூருவை வென்றது. இரண்டாவது ஆட்டத்தில் சிஎஸ்கேவிடம் தோல்வியடைந்தது. ஐதராபாத் அணியிடம் தோல்வியும், டெல்லியிடம் வெற்றியும் பெற்றது. தனது 5வது போட்டியில் மூன்றாவது வெற்றியை எதிர்நோக்கி களமிறங்குகிறது.

சஞ்சு அதிரடி ஆட்டம்
ராஜஸ்தானை பொறுத்தவரை பேட்டிங்கில் கலக்கி வருகிறது. குறிப்பாக சஞ்சு சாம்சன் மிரட்டலாக விளையாடி வருகிறார். இந்த சீசனில் மிக அதிகபட்ச ஸ்கோர் எடுத்துள்ளது. ரஹானே உள்ளிட்டோரும் தங்களுடைய பங்களிப்பை சிறப்பாக அளித்து வருகின்றனர். பந்து வீச்சிலும் இதுவரை கலக்கி வருகின்றனர்.

ஸ்டார்கள் நிறைந்த அணி
தினேஷ் கார்த்திக், ராபின் உத்தப்பா, நிதிஷ் ரானா, ஆந்தரே ரசல் போன்ற அதிரடி பேட்ஸ்மேன்கள், சுனில் நரேன் போன்ற ஆல்ரவுண்டர், பியுஷ் சாவ்லா, குல்தீப் யாதவ் போன்ற பந்து வீச்சாளர்களை கொல்கத்தா கொண்டுள்ளது. ஆனாலும், யார் எப்போது எப்படி விளையாடுவார்கள் என்பது கணிக்க முடியாமல் உள்ளது.

ரன் மழையை எதிர்பார்க்கலாம்
ஜெய்ப்பூரில் இன்று நடந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா பவுலிங்கை தேர்ந்தெடுத்தது. ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 160 ரன்களுக்கு சுருண்டது. கேப்டன் ரஹானே 36, ஆர்சி ஷார்ட் 44 ரன்கள் எடுத்தனர். மிக சுலபமான இலக்கை நோக்கி விளையாடிய கொல்கத்தா 18.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்து வென்றது. கேப்டன் தினேஷ் கார்த்திக் ஆட்டமிழக்காமல் 42 ரன்களும், ராபின் உத்தப்பா 48 ரன்களும், நிதிஷ் ரானா ஆட்டமிழக்காமல் 35 ரன்களும் எடுத்து கொல்கத்தா அணிக்கு மூன்றாவது வெற்றியை உறுதி செய்தனர்.


Click it and Unblock the Notifications