Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டெல்லிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் பேட்டிங்... விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றம்

டெல்லி: டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் முதலில் பேட்டிங் செய்கிறது. 6 ஓவர்கள் முடிவதற்குள் 4 முக்கிய விக்கெட்டுகளை இழந்து ராஜஸ்தான் தடுமாறுகிறது.

ஐபிஎல் தொடரின் 53வது போட்டி டெல்லியில் உள்ள பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் தொடங்கி இருக்கிறது. போட்டியில் ஏற்கனவே பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்ட டெல்லி அணியும், வாழ்வா? சாவா? என போராடிக் கொண்டு இருக்கும் ராஜஸ்தான் அணியும் மோதுகின்றன.

டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் அஜிங்க்யா ரஹானே பேட்டிங் தேர்வு செய்தார். புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தை பிடித்து நேரடியாக பைனலுக்கு செல்லும் போட்டியில் ஆடும் வாய்ப்பை பெற இன்றைய போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என களமிறங்குகிறது டெல்லி அணி.

பிளே ஆப் சுற்று கிடைக்குமா?

பிளே ஆப் சுற்று கிடைக்குமா?

அதேபோல், இன்றைய போட்டியில் வென்றால் மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை தக்க வைக்க முடியும் என்று களமிறங்குகிறது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. ஆகவே, இந்த போட்டியில் பரபரப்பு நிலவும் என்பதில் சந்தேகம் இல்லை. ராஜஸ்தான் அணி இன்றைய போட்டியில் இரு மாற்றங்களுடன் ஆடுகிறது.

மாற்றங்கள் என்ன?

மாற்றங்கள் என்ன?

கேப்டன் ஸ்மித் ஆஸ்திரேலியா சென்றுவிட்டதால், மீண்டும் ரகானே கேப்டன் பொறுப்பேற்கிறார். ஸ்மித் மற்றும் உனட்கட் வெளியில் அமர்த்தப்பட்டு, இஷ் சோதி மற்றும் க்ரிஷ்ணப்பா கௌதம் இன்றைய போட்டியில் ஆடுகின்றனர். டெல்லி அணியில் ஜெகதீசா சுசீத் மற்றும் கிரிஷ் மோரிஸ் வெளியில் அமர்த்தப்பட்டுள்ளனர். அவர்கள் இருவருக்கும் பதிலாக இஷாந்த் ஷர்மா மற்றும் கீமோ பால் இருவரும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ரகானே அவுட்

ரகானே அவுட்

துவக்க வீரர்களாக லிவிங்ஸ்டனும், கேப்டன் ரகானேவும் களம் இறங்கினர். அதிரடியாக ரன் குவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் ரகானே அவுட்டானார். வெறும் 2 ரன்களில் இஷாந்த் பந்தில், தவானிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அவரை தொடர்ந்து லிவிங்ஸ்டன் 14 ரன்களில் அவுட்டானார். யாரும் எதிர்பார்க்காத வேளையில் ஒரு ரன்னுக்கு ஆசைப்பட்டு ஓடிய சஞ்சு சாம்சன் ரன் அவுட்டானார்.

தொடர்ந்து அவுட்

தொடர்ந்து அவுட்

அடுத்தடுத்து விக்கெட்டுகள் இழந்து அதிர்ச்சியில் இருந்த ராஜஸ்தானுக்கு மற்றொரு இழப்பாக, லோம்ரரும் ஆட்டமிழந்தார். 6 ஓவர்கள் முடிவதற்குள் 4 முக்கிய விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றத்தில் இருக்கிறது. ராஜஸ்தான் அணியை பொறுத்தவரை இந்த ஆட்டம் மிக முக்கியமான வாழ்வா? சாவா? ஆட்டமாகும். ஆனால் விக்கெட் வீழ்ச்சி அந்த அணி ரசிகர்களை கவலையில் ஆழ்த்தி உள்ளது.

Story first published: Saturday, May 4, 2019, 17:09 [IST]
Other articles published on May 4, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+