Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கடைசி வரை நின்ற ஜோஸ் பட்லர்... ராஜஸ்தான் அபார வெற்றி... பிளேஆப் நுழைய சிஎஸ்கே காத்திருக்கணும்!

Recommended Video

சென்னையுடன் மோதும் ராஜஸ்தான்... தகுதி பெறுமா ?

ஜெய்ப்பூர்: ஜெய்ப்பூரில் நடந்த பரபரப்பான ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்று பிளே ஆப் சுற்று வாய்ப்பை தக்க வைத்துள்ளது. அதே நேரத்தில் பிளே ஆப் சுற்றுக்கு நுழைவதற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி காத்திருக்க வேண்டும்.

ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் 11வது சீசன் நடந்து வருகிறது. இந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இரண்டாண்டுகளுக்குப் பிறகு மீண்டும் களமிறங்கியுள்ளன.

டெல்லியில் நேற்று நடந்த ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியை வென்று 18 புள்ளிகளுடன், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

இரண்டாண்டுகளுக்குப் பிறகு களமிறங்கியுள்ள சிஎஸ்கே மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் முதல் 9 நாட்களில் தலா 2 வெற்றி, ஒரு தோல்வியுடன் இருந்தன. அதன்பிறகு நிலைமை மாறிவிட்டது.

பிளேஆப் சுற்று வாய்ப்பு

பிளேஆப் சுற்று வாய்ப்பு

10 ஆட்டங்களில் 7 வெற்றிகளுடன் 14 புள்ளிகளைப் பெற்றுள்ள சிஎஸ்கே, அடுத்து ஒரு வெற்றி பெற்றால் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறிவிடும். அதே நேரத்தில் ராஜஸ்தான் 10ல் 4ல் மட்டுமே வென்று 8 புள்ளிகளுடன் உள்ளது. அடுத்து விளையாடும் 4 ஆட்டங்களிலும் வென்றால்தான் பிளே ஆப் வாய்ப்பு கிடைக்கும் நிலையில் உள்ளது.

வெற்றி கட்டாயத்தில் ராஜஸ்தான்

வெற்றி கட்டாயத்தில் ராஜஸ்தான்

தொடர்ந்து மூன்று தோல்விகளைப் பெற்ற ராஜஸ்தான், பஞ்சாப் அணிக்கு எதிராக வென்றது. இதுவரை பெற்றுள்ள 4 வெற்றிகளில், மூன்று சொந்த மைதானமான ஜெய்ப்பூரில் கிடைத்துள்ளது. சிஎஸ்கேவுக்கு எதிராக சொந்த மண்ணில் களமிறங்குவதால் வெற்றிக்காக ராஜஸ்தான் போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரெய்னா அரைசதம்

ரெய்னா அரைசதம்

ஜெய்ப்பூரில் நடக்கும் ஆட்டத்தில் டாஸ் வென்ற சிஎஸ் பேட்டிங் தேர்வு செய்தது. 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்துள்ளது. ராயுடு 12, வாட்சன் 39, சுரேஷ் ரெய்னா 52, சாம் பில்லிங் 27 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். கேப்டன் தோனி ஆட்டமிழக்காமல் 33 ரன்கள் எடுத்தார்.

ராஜஸ்தான் வென்றது

ராஜஸ்தான் வென்றது

177 ரன்கள் என்ற இலக்குடன் பேட்டிங் துவக்கிய ராஜஸ்தான் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் எடுத்து, நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. துவக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ஜோஸ் பட்லர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 60 பந்துகளில் 11 பவுண்டரிகள், 2 சிக்சர்களுடன், 95 ரன்கள் எடுத்து அணிக்கு வெற்றியை தேடித் தந்தார்.

10 புள்ளிகளுடன் 6வது இடத்தில் உள்ள ராஜஸ்தான், பிளே ஆப் சுற்று வாய்ப்பை தக்க வைத்துள்ளது. அதே நேரத்தில் பிளே ஆப் சுற்றுக்கு நுழைவதற்கு சிஎஸ்கே காத்திருக்க வேண்டும்.

Story first published: Friday, May 11, 2018, 23:54 [IST]
Other articles published on May 11, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+