ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் டைவர்ஸ் ஆன வீரர் வாட்ஸ்அப்பில் சில்மிஷம்.. நடிகை குற்றச்சாட்டு
மும்பை: பிரபல இந்தி தொலைக்காட்சி தொடரான 'தாரக் மேத்தா கா ஊல்டா சஸ்மா' மூலம் புகழ்பெற்ற நடிகை நேஹால் வதோலியா, விவாகரத்து பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கிரிக்கெட் வீரர் ஒருவர் தனக்குத் தொடர்ந்து மெசேஜ் அனுப்பியதாகக் கூறி பரபரப்பைக் கிளப்பியுள்ளார்.
நடிகையின் குற்றச்சாட்டு
சமீபத்தில் ஒரு பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை நேஹால் வதோலியா, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியைச் சேர்ந்த ஒரு கிரிக்கெட் வீரர் தனது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்களுக்குத் தொடர்ந்து மெசேஜ் அனுப்பி தொல்லை கொடுத்ததாகக் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில், "நான் அந்த வீரரின் பெயரைச் சொல்லவா? அவர் பெரிய அளவில் அறியப்பட்ட ஒரு வீரர் கிடையாது. அவர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் விளையாடி வருகிறார். மேலும், அவர் விவாகரத்து பெற்றவர். நான் வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸ் வைக்கும் போதெல்லாம், 'ஹாட்', 'பியூட்டிஃபுல்' மற்றும் 'கவர்ச்சி' என கமெண்ட் செய்வார்" என்று கூறியுள்ளார்.

பிளாக் செய்த நடிகை
தொடர்ந்து பேசிய நேஹால், "அவர் மெசேஜ் செய்யும்போது, 'ஏன் எனக்குத் தொடர்ந்து மெசேஜ் செய்கிறீர்கள்? எனக்கு உங்களுடன் பேச விருப்பமில்லை' என்று நான் பலமுறை கூறினேன். அதன் பிறகு சில நாட்கள் மெசேஜ் செய்வதை நிறுத்துவார். ஆனால், நான் மீண்டும் ஸ்டேட்டஸ் வைக்கும் போது மெசேஜ் செய்யத் தொடங்கிவிடுவார். இதனால் எரிச்சலடைந்த நான், தற்போது அவரை வாட்ஸ்அப்பில் முழுமையாக பிளாக் செய்துவிட்டேன். நான் நினைத்தால் இப்போதும் அவரது மெசேஜ்களைக் காட்ட முடியும்" என்று நேஹால் வதோலியா தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் அணியின் நிலை
நடப்பு 2026 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, இரண்டாவது தகுதிச் சுற்று ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்து 3-வது இடத்தைப் பிடித்து வெளியேறியது. இப்போட்டியில் குஜராத் கேப்டன் சுப்மன் கில் அதிரடி சதம் விளாசினார். இந்தத் தொடரில் ராஜஸ்தான் அணியின் 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, 440 பந்துகளில் 1,000 ரன்களைக் கடந்து அதிவேகமாக இந்த மைல்கல்லை எட்டிய வீரர் என்ற சாதனையைப் படைத்திருந்தார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தோல்வியின் சோகத்தில் இருந்து இன்னும் மீளாத நிலையில், அந்த அணியின் வீரர் ஒருவர் மீது நடிகை நேஹால் வதோலியா சுமத்தியுள்ள இந்தக் குற்றச்சாட்டு கிரிக்கெட் மற்றும் திரையுலக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications
