SRH VS RR: ராஜஸ்தான் பேட்டிங்.. பவுண்டரியுடன் தொடங்கிய பட்லர்.. ரஷித் பந்தில் கிளீன் போல்டு
ஹைதராபாத்: சன் ரைசர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெரிதும் எதிர் பார்க்கப்பட்ட பட்லர் 5 ரன்களில் ஆட்டமிழந்தார்.
ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று ஹைதராபாத்தில் நடைபெறும் போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரிட்சை நடத்த உள்ளது. இரு அணிகளுமே வெற்றி கணக்கை துவக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.
போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் காயத்தில் இருந்து குணமடைந்து இன்றைய போட்டியில் களமிறங்கியுள்ளார்.

2 மாற்றங்கள்
சன் ரைசர்ஸ் அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அணியில் 2 வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். ஒருவர் வில்லியம்சன் காயத்தில் இருந்து மீண்டும் அணியில் சேர்ந்துள்ளார்.

மாற்றமில்லை
மற்றொருவர் நதீம். இவர் தீபக் ஹூடாவுக்கு பதில் அணியில் சேர்க்கப் பட்டுள்ளார். ராஜஸ்தான் அணியில் எவ்வித மாற்றங்களும் செய்யப்படவில்லை. கடந்த போட்டியில் களம் கண்ட அதே அணியும் இப்போது மீண்டும் விளையாடுகிறது.

முதல் ஓவரில் 3
இதையடுத்து, ராஜஸ்தான் அணியின் துவக்க வீரர்களாக ரகானேவும், பட்லரும் களம் இறங்கினர். முதல் ஓவரில் அந்த அணி வெறும் 3 ரன்களை மட்டுமே எடுத்தது.

பட்லர் 0 ரன்கள்
2வது ஓவரிலும் 7 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த ஓவரிலும் தமது ரன் கணக்கை துவங்காமல் தான் இருந்தார் பட்லர். 3வது ஓவரில் மெதுவாக ரன்கள் உயர்ந்தன.

பவுண்டரியில் துவக்கம்
அதுவரை ரன் ஏதும் எடுக்காமல் இருந்த பட்லர் பவுண்டரியை அடுத்து தமது ரன் கணக்கை துவங்கினார். அந்த பவுண்டரியை ரசிகர்கள் உற்சாக மிகுதியாக வரவேற்றனர்.

க்ளீன் போல்டு
அந்த மகிழ்ச்சி சில நிமிடங்கள் கூட நீடிக்கவில்லை. 4வது ஓவரை ரஷித் கான் வீசினார். அந்த ஓவரின் 2வது பந்தில் என்ன நடந்தது என்றே பட்லரால் ஊகிக்க முடியவில்லை.

ரசிகர்கள் ஆர்வம்
போல்டாகி வெளியேறி, ரசிகர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார். அவரை தொடர்ந்து, 2வது விக்கெட்டுக்கு ரகானேவுடன் சஞ்சு சாம்சன் கை கோர்த்தார். அணியின் ரன்விகிதம் 6 என்ற அடிப்படையில் உள்ளதால் கடினமான இலக்கை ராஜஸ்தான் அணி எட்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.


Click it and Unblock the Notifications