சஞ்சு சாம்சன் தலையில் பெரும் இடி.. ஒரே நேரத்தில் எத்தனை சிக்கல்.. முக்கிய வீரரால் ராஜஸ்தான் சோகம்!!
மும்பை: ராஜஸ்தான் அணியில் இருந்து முன்னணி வீரர் ஒருவர் விலகியுள்ளதால், அந்த அணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
15வது ஐபிஎல் தொடரில் தற்போதைக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தான் கிங் மேக்கராக இருந்து வருகிறது.
இதுவரை விளையாடியுள்ள 3 போட்டிகளில் 2 வெற்றிகளை பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

ராஜஸ்தான் வெற்றி பாதை
சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணி தனது முதல் 2 போட்டியிலுமே டாஸில் தோல்வியடைந்தது. எனினும் படு பலமான பேட்டிங் வரிசையால் அபார வெற்றி பெற்றது. எனினும் ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் வெற்றிக்கு அருகில் சென்று வெற்றியை தவறவிட்டது. கடும் முயற்சிகள் தோல்வியடைந்தது என சஞ்சு சாம்சன் சோகத்தில் இருந்தார்.

மற்றொரு அதிர்ச்சி
இந்நிலையில் அவருக்கு மேலும் ஒரு அதிர்ச்சி வந்துள்ளது. அதாவது அந்த அணியின் முக்கிய பவுலரான நாதன் கோல்டர் நைல், ஐபிஎல்-ல் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். ஐதராபாத் அணிக்கு எதிரான முதல் போட்டியில் சிறப்பாக பவுலிங் வீசிக்கொண்டிருந்த நாதனுக்கு கடைசி ஓவரில் திடீரென காலில் வலி ஏற்பட்டு துடித்தார்.

காரணம் என்ன
இதனையடுத்து களத்தில் இருந்து உடனடியாக வெளியேற்றப்பட்டார். அவரை பரிசோதனை செய்து பார்த்ததில் காயம் குணமாக நீண்ட நாட்கள் எடுத்துக்கொள்ளும் என்பதால், அவர் விளையாட முடியாது என தெரியவந்தது. இதனால் இனி அந்த அனுபவ பவுலர் இல்லாமல் தான் சஞ்சு சாம்சன் திட்டமிட வேண்டும் என்ற சூழல் உருவாகியுள்ளது.

மாற்று வீரர்கள்
நாதன் கோல்டர் நைலுக்கு மாற்று வீரராக கடந்த 2 போட்டிகளில் நவ்தீப் சைனி சேர்க்கப்பட்டிருந்தார். எனினும் நேற்றைய போட்டியில் ஆர்சிபியை இவர் திணறடிக்கவில்லை. இதனால் தஷுன் ஷனகா, பென் கட்டிங் ஆகியோர் மாற்று வீரர்களாக தேர்வு செய்யப்படலாம் எனத்தகவல் வெளியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications