SRH VS RR: 55 பந்துகளில் 102.. சன் ரைஸர்சை புரட்டி எடுத்த சாம்சன்... ஐபிஎல் தொடரின் முதல் சதம்
SRH VS RR: 55 பந்துகளில் 102.. சன் ரைஸர்சை புரட்டி எடுத்த சாம்சன்... ஐபிஎல் தொடரின் முதல் சதம்
ஹைதராபாத்:சன் ரைசர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் வீரர் சாம்சன் சதமடித்தார்.இதன் மூலம் இந்த தொடரில் முதல் சதம் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. துவக்க வீரர்களாக ரகானேவும், பட்லரும் களம் இறங்கினர். முதல் ஓவரில் வெறும் 3 ரன்களை மட்டுமே எடுத்தது.
2வது ஓவரிலும் 7 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த ஓவரிலும் தமது ரன் கணக்கை துவங்காமல் தான் இருந்தார் பட்லர் பின்னர் தமது ரன் கணக்கை துவங்கினார். அந்த மகிழ்ச்சி சில நிமிடங்கள் கூட நீடிக்கவில்லை. ரஷித் கான் ஓவரில் போல்டாகி வெளியேறி, ரசிகர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார்.

ரகானே, சாம்சன்
அவரை தொடர்ந்து, 2வது விக்கெட்டுக்கு ரகானேவுடன் சஞ்சு சாம்சன் ஜோடி சொல்லி வைத்தார்போல் அருமையாக ஆடியது. இருவரும் சன் ரைசர்ஸ் பந்துகளை பதம் பார்த்தனர்.

ரகானே அரைசதம்
தொடக்க வீரர் ரகானே, 2வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த் சாம்சன் ஆகியோரை பிரிக்க சன் ரைசர்ஸ் அணியின் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வி. ரன் குவிப்பை கட்டுப்படுத்த முடியவில்லை.

ரகானே, சாம்சன் அற்புதம்
2வது விக்கெட்டுக்கு இருவரும் ஜோடியாக சேர்த்த ரன்கள் மட்டும் 119. ஸ்கோர் 134 ரன்களாக இருந்த போது 70 ரன்கள் எடுத்த ரகானே ஆட்டமிழந்தார்.சன் ரைசர்ஸ் அணிக்கோ... குஷியோ குஷி.

ருத்ரதாண்டவம்
ஆனால்.. அந்த மகிழ்ச்சி சில நிமிடங்கள் கூட நீடிக்கவில்லை. ஸ்டோக்ஸ் வந்தாலும் மறுமுனையில் நின்ற சாம்சன் ருத்ரதாண்டவமாடினார். சன்ரைசர்ஸ் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார்.

சாம்சன் சதம்
பவுண்டரிகள், சிக்சர்கள் என்று விளாசிய சாம்சன் வெறும் 55 பந்துகளில் தமது சதத்தை பூர்த்தி செய்தார். இதன் மூலம் இந்த தொடரில் முதல் சதம் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

199 ரன்கள் வெற்றி இலக்கு
இறுதிக்கட்ட ஓவர்களில் ராஜஸ்தான் அணிக்கு ரன்களாக வந்து குவிந்தன. இதையடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 198 ரன்கள் எடுத்தது. சாம்சன் (102), ஸ்டோக்ஸ் (16) ஆகியோர் இறுதி வரை களத்தில் இருந்தனர்.


Click it and Unblock the Notifications