
பைக் ஸ்டண்ட்
இதில், ராபி மெடிசன், பைக்கில் அசத்தலாக ஓட்டினார். மேலும் வீட்டின் சுவரில் பைக் ஓட்டுவது, சாலையில் வீலிங் செய்வது, போலீசார் தடுப்புகளை தாண்டுவது என அசத்தும் காட்சிகள் இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது. இறுதியில் ராபி மெடிசன், மைதானத்தில் உச்சியில் இருந்து பைக் மூலம் கீழே குதித்து அசத்தினார்.

ரசிகர்கள் கேலி
ராபி மெடிசன், புதிய ஜெர்சியை ராஜஸ்தான் அணி வீரர்களுக்கு வழங்கினார். இவ்வளவு கஷ்டப்பட்டு வீடியோ எடுத்த ராஜஸ்தான் கடைசியில் ஜெர்சியில் கோட்டைவிட்டது. பூமர் பபுள் காம் போல் ராஜஸ்தான் ஜெர்சி தோற்றம் இருப்பதாகவும், அதன் தரமும் சொல்லும் படி இல்லை என்றும் ரசிகர்கள் கேலி செய்து வருகின்றனர்.

பயிற்சி முகாம்
ராஜஸ்தான் அணி ஆண்டுதோறும் ஜெர்சியை ஏன் மாற்றி வருகிறார்கள் என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். ராஜஸ்தான் ராய்ல்ஸ் அணி முகாமில் அஸ்வின், பட்லர் ஆகியோர் நாளை இயணைய உள்ளனர். ராஜஸ்தான் அணி இம்முறை பலமான அணியையே தேர்வு செய்துள்ளனர்.
பலமான அணி
டேவிடட் படிக்கல், சஞ்சு சாம்சன், பட்லர், சிம்ரன் ஹேட்மர், ஜெய்ஷ்வால், டேரல் மிட்செல், அஸ்வின், பிரசித் கிருஷ்ணா, சாஹல், டிரெண்ட் பவுல்ட் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இதனால் புதிய அணி, புதிய ஜெர்சியை வைத்து களமிறங்கும் ராயல்ஸ் அணி பல ஆண்டுக்கு பிறகாவது ஐபிஎல் கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications