Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

SRH VS RR: ரன் மழை பொழிந்து சதமடித்த சாம்சன்... 199 ரன்களை இலக்காக நிர்ணயித்த ராஜஸ்தான்

ஹைதராபாத்:சன் ரைசர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி 199 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் ஹைதராபாத்தில் நடைபெறும் போட்டியில் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் காயத்தில் இருந்து குணமடைந்து இன்றைய போட்டியில் களமிறங்கியுள்ளார்.

ராஜஸ்தான் அணி துவக்க வீரர்களாக ரகானேவும், பட்லரும் களம் இறங்கினர். முதல் ஓவரில் வெறும் 3 ரன்களை மட்டுமே எடுத்தது. 2வது ஓவரிலும் 7 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த ஓவரிலும் தமது ரன் கணக்கை துவங்காமல் தான் இருந்தார் பட்லர்.

பட்லர் போல்டு

பட்லர் போல்டு

அதுவரை ரன் ஏதும் எடுக்காமல் இருந்த பட்லர் பவுண்டரியை அடுத்து தமது ரன் கணக்கை துவங்கினார். அந்த மகிழ்ச்சி சில நிமிடங்கள் கூட நீடிக்கவில்லை. ரஷித் கான் ஓவரில் போல்டாகி வெளியேறி, ரசிகர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார்.

ரகானே, சாம்சன் ஆட்டம்

ரகானே, சாம்சன் ஆட்டம்

அவரை தொடர்ந்து, 2வது விக்கெட்டுக்கு ரகானேவுடன் சஞ்சு சாம்சன் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக, அதே சமயத்தில் அருமையாக பந்துகளை எதிர்கொண்டனர். முதல் 50 ரன்களை 8வது ஓவரிலும், 100 ரன்களை 12வது ஓவரிலும் இருவரும் எட்டினர்.

இருவரும் அரைசதம்

இருவரும் அரைசதம்

தொடக்க வீரராக களம் இறங்கிய ரகானே, 2வது விக்கெட்டுக்கு ஜோடி சாம்சன் ஆகியோரை பிரிக்க முயன்றும் முடியவில்லை.இருவரும் அரை சதம் கடந்து அணிக்கு வலு சேர்த்தனர்.

ரகானே, சாம்சன் அற்புதம்

ரகானே, சாம்சன் அற்புதம்

இருவரும் 2வது விக்கெட்டுக்கு 119 ரன்கள் சேர்த்து அபாரமாக ஆடினர். அணியின் ஸ்கோர் 134 ரன்களாக இருந்த போது யாரும் எதிர்பாராத வகையில் ரகானே ஆட்டமிழந்தார். அவர் எடுத்தது 70 ரன்கள்.

துவம்சம் செயத் சாம்சன்

துவம்சம் செயத் சாம்சன்

அவருக்கு அடுத்து வந்தார் ஸ்டோக்ஸ். ஆனால் மறுமுனையிலோ... சாம்சன் சூறாவளியாக மாறி, பந்துகளை அடித்து துவம்சம் செய்தார். சன்ரைசர்ஸ் பந்துவீச்சை அடித்து துவம்சம் செய்தார். சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ரகானே வெளியேறிய நிலையில் அந்த பொறுப்பையும் ஏற்று ரன்களை குவித்தார். சதமும் அடித்தார்.

199 ரன்கள் வெற்றி இலக்கு

199 ரன்கள் வெற்றி இலக்கு

ஹைதராபாத் பவுலர் புவனேஷ்வர் குமார் வீசிய 18வது ஓவரில் அனல் பறந்தது. 1 சிக்சர், 4 பவுண்டரி என மொத்தமாக 24 ரன்கள் விளாசினார். இதையடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 198 ரன்கள் எடுத்தது. சாம்சன் (102), ஸ்டோக்ஸ் (16) அவுட்டாகாமல் இருந்தனர்.

Story first published: Friday, March 29, 2019, 22:13 [IST]
Other articles published on Mar 29, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+