Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

RR vs RCB: எப்பா... முடியல..! 19வது ஓவர் வரை இழு.. இழுன்னு இழுத்து.. ஒரு வழியாக ஜெயித்த ராஜஸ்தான்

ஜெய்பூர்:பெங்களூர் அணிக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி ஒரு பந்தை மீதம் வைத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐபிஎல் தொடர் முக்கியமான ஆட்டத்தில் பெங்களூர் அணியும், ராஜஸ்தானும் களம் கண்டன. ஜெய்பூரில் நடைபெற்ற இந்த போட்டியில் ராஜஸ்தான் டாஸ் வென்றது. பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது.

1
45770

இதையடுத்து, பெங்களூர் அணி முதலில் களம் இறங்கியது. முதலில் நிதானம், கொஞ்சம் சொதப்பல், இறுதிக்கட்டத்தில் அதிரடி என 20 ஓவர்களில் பெங்களூர் அணி ஒரு வழியாக 158 ரன்களை குவித்தது. பார்த்தீவ் படேல் 67 ரன்கள் எடுத்தார்.

அருமையான தொடக்கம்

அருமையான தொடக்கம்

159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்பது 20 ஓவர் போட்டிகளில் எளிதான இலக்கு. எனவே.. மிகுந்த நம்பிக்கையுடன் தொடக்க வீரர்களாக கேப்டன் ரகானேவும், மன்கட் பலிகடா ஜாஸ் பட்லரும் களம் இறங்கினர்.

நிதானமாக ஆடினர்

நிதானமாக ஆடினர்

இருவரும் பொறுமையாக... தவறான பந்துகளை சரியாக தேர்ந்தெடுத்து பொறுப்பாக ஆடினர். இந்த ஜோடியை பிரித்து... அணிக்கு பிரேக் எடுப்பது எப்படி என்று தெரியாமல் பெங்களூர் அணி தடுமாறியது என்றே சொல்லலாம்.

8வது ஓவரில் அவுட்

8வது ஓவரில் அவுட்

8வது ஓவரில் பெங்களூர் அணியின் பந்துவீச்சு பலித்தது. சாஹல் பந்தில் எல்பிடபிள் யூ முறையில் ரகானே ஆட்டம் இழந்தார். முதல் முறையாக பெங்களூர் வீரர்கள் உற்சாகம் அடைந்தனர்.

பட்லர் அபாரம்

பட்லர் அபாரம்

2வது விக்கெட்டுக்கு கை கோர்த்தார் ஸ்மித். இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ரன் ரேட்டும் உயர... சிறப்பாக ஆடிய பட்லர் அரை சதம் கடந்தார்.

வீரர்கள் அக்கறை

வீரர்கள் அக்கறை

வெற்றி முக்கியம் என்பதை ராஜஸ்தான் வீரர்கள் உணர்ந்திருந்தனர். அதிரடி ஆட்டம் என்பதை கொஞ்சம் ஓரமாக ஒதுக்கி வைத்து விட்டு.... மெதுவாக ரன்களை சேர்ப்பதிலும் விக்கெட்டுகளை காப்பாற்றுவதிலும் ராஜஸ்தான் வீரர்கள் அக்கறை காட்டினர்.

பட்லர் அவுட்

பட்லர் அவுட்

அவர்களின் இந்த ஐடியா ஓரளவு கை கொடுத்தது என்றே கூறலாம். இருப்பினும், நிதானமாக ஆடிய பட்லர் அணியின் ஸ்கோர் 104 ரன்களாக இருந்த போது அவுட்டானார். அவர் எடுத்தது 59 ரன்கள்.

ஸ்மித் ஆட்டமிழந்தார்

ஸ்மித் ஆட்டமிழந்தார்

அதன்பிறகு... மற்றவர்களின் விக்கெட்டுகளை எப்படியாவது கைப்பற்றி விடலாம் என்று பெங்களூர் பந்துவீச்சாளர்கள் முயற்சித்தனர். ஆனாலும் அதற்கான பலன் அணியின் ஸ்கோர் 154 ஆக இருந்தபோது ஸ்மித் ஆட்டமிழந்தார்.

கவலையில் ரசிகர்கள்

கவலையில் ரசிகர்கள்

பந்துகளும், எடுக்கவேண்டிய ரன்களும் சரிசமமாக இருந்து வந்ததால்.... யாருக்கு வெற்றி என்பது ஒரு கட்டத்தில் தீர்மானிக்க முடியாமல் இருந்தது. ரசிகர்களும் கவலையுடன் இருந்ததை நன்றாக காண முடிந்தது.

ராஜஸ்தான் வெற்றி

ராஜஸ்தான் வெற்றி

இறுதியாக... ஒரேயொரு பந்தை மீதம் வைத்து 19.5வது ஓவரில் திரிபாதி சிக்சர் அடித்து ஆ....... ட்டத்தை முடித்து வைத்தார். இதையடுத்து, பெங்களூர் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி புள்ளிகள் பட்டியலுக்குள் ராஜஸ்தான் நுழைந்தது.

Story first published: Wednesday, April 3, 2019, 11:05 [IST]
Other articles published on Apr 3, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+