Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

RR vs DC: டாஸ் வென்று ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங்... ஆரம்பமே சரியில்லை... ரகானே அவுட்

டெல்லி:டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் முதலில் பேட்டிங் செய்கிறது. அணியின் கேப்டன் ரகானே 2வது ஓவரில் தமது விக்கெட்டை பறிகொடுத்தார்.

ஐபிஎல் தொடரின் 53வது போட்டி டெல்லியில் உள்ள பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் தொடங்கி இருக்கிறது. போட்டியில் ஏற்கனவே பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்ட டெல்லி அணியும், வாழ்வா? சாவா? என போராடிக் கொண்டு இருக்கும் ராஜஸ்தான் அணியும் மோதுகின்றன.

டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் அஜிங்க்யா ரஹானே பேட்டிங் தேர்வு செய்தார். புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தை பிடித்து நேரடியாக பைனலுக்கு செல்லும் போட்டியில் ஆடும் வாய்ப்பை பெற இன்றைய போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என களமிறங்குகிறது டெல்லி அணி.

 பிளே ஆப் சுற்று கிடைக்குமா?

பிளே ஆப் சுற்று கிடைக்குமா?

அதேபோல், இன்றைய போட்டியில் வென்றால் மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை தக்க வைக்க முடியும் என்று களமிறங்குகிறது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. ஆகவே, இந்த போட்டியில் பரபரப்பு நிலவும் என்பதில் சந்தேகம் இல்லை. ராஜஸ்தான் அணி இன்றைய போட்டியில் இரு மாற்றங்களுடன் ஆடுகிறது.

 மாற்றங்கள் என்ன?

மாற்றங்கள் என்ன?

கேப்டன் ஸ்மித் ஆஸ்திரேலியா சென்றுவிட்டதால், மீண்டும் ரகானே கேப்டன் பொறுப்பேற்கிறார். ஸ்மித் மற்றும் உனட்கட் வெளியில் அமர்த்தப்பட்டு, இஷ் சோதி மற்றும் க்ரிஷ்ணப்பா கௌதம் இன்றைய போட்டியில் ஆடுகின்றனர். டெல்லி அணியில் ஜெகதீசா சுசீத் மற்றும் கிரிஷ் மோரிஸ் வெளியில் அமர்த்தப்பட்டுள்ளனர். அவர்கள் இருவருக்கும் பதிலாக இஷாந்த் ஷர்மா மற்றும் கீமோ பால் இருவரும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

 யார்? யார்?

யார்? யார்?

டெல்லி கேப்பிடல்ஸ் அணி விவரம்: ப்ரீத்வி ஷா, ஷிகார் தவான், ஸ்ரேயாஸ் அய்யர் (கேப்டன்), ரிஷப் பன்ட் (விக்கெட் கீப்பர்), கொலின் இங்ராம், ஷெர்பேன் ரூதர்போர்ட், கீமோ பால், அக்ஸார் படேல், அமித் மிஸ்ரா, இஷாந்த் சர்மா, ட்ரெண்ட் போல்ட்

 வீரர்கள் விவரம்

வீரர்கள் விவரம்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விவரம்: சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), லியாம் லிவிங்ஸ்டன், அஜிங்கியா ரகானே (கேப்டன்), ரியான் பராக், ஸ்டூவர்ட் பின்னி, மஹிபல் லோம்ரோர், கிருஷ்ணப்பா கவுதம், ஷீயாஸ் கோபால், இஷ் சோதி, வருண் ஆரோன், ஓஷேன் தாமஸ்.

 ரகானே அவுட்

ரகானே அவுட்

துவக்க வீரர்களாக லிவிங்ஸ்டனும், கேப்டன் ரகானேவும் களம் இறங்கினார். அதிரடியாக ரன் குவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் ரகானே அவுட்டானார். வெறும் 2 ரன்களில் இஷாந்த் பந்தில், தவானிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். தொடக்கத்திலேயே முக்கிய விக்கெட் விழுந்திருப்பது அந்த அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

Story first published: Saturday, May 4, 2019, 16:32 [IST]
Other articles published on May 4, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+