Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பெங்களூருக்கு எதிரான போட்டி.. டாஸ் வென்ற ராஜஸ்தான் முதலில் பவுலிங்

RCB vs RR:பெங்களூருக்கு எதிரான போட்டி.. டாஸ் வென்ற ராஜஸ்தான் முதலில் பவுலிங்.. கட்டாய வெற்றி தேவை

பெங்களூரு:பெங்களூருவில் நடைபெறும் ஐபிஎல் ஆட்டத்தில் பெங்களூரு அணிக்கு எதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

ஐபிஎல் தொடரின் 49 வது போட்டி பெங்களூரில் உள்ள சின்னசாமி மைதானத்தில் தொடஙகியது. போட்டியில் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் ஏழாவது இடத்தில் இருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் மோதுகின்றன.

முதலில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பந்து வீச முடிவு செய்துள்ளார். பெங்களூர் அணி கிட்டத்தட்ட ப்ளே ஆப் சுற்றுக்கு நுழையும் வாய்ப்பை இழந்து விட்டது.

ரன்ரேட் தேவை

ரன்ரேட் தேவை

ஆனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 10 புள்ளிகளுடன் இருக்கிறது. எனவே அடுத்தடுத்து 2 போட்டிகளில் நல்ல ரன்ரேட் விகிதத்தில் வென்றால் ப்ளே ஆப் சுற்றுக்குள் நுழையும் வாய்ப்பு இருக்கிறது.

டர்னருக்கு வாயப்பில்லை

டர்னருக்கு வாயப்பில்லை

இன்றைய போட்டியில் ராஜஸ்தான் அணி, தங்களது அணியில் ஒரே ஓரு மாற்றத்தை செய்துள்ளது. ஆஸ்திரேலியா அணி வீரர் அஷ்டன் டர்னர் வெளியில் அமர்த்தப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக இந்திய முதல் தர வீரர் மஹிபால் லெமோரேர் களமிறங்குகிறார். ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியின் மூலம் அறிமுகம் ஆகிறார்.

மாற்றங்கள்

மாற்றங்கள்

பெங்களூரு அணி 2 மாற்றங்களை செய்துள்ளது பெங்களூரு அணி. பவன் நேகி இன்றைய போட்டியில் ஆடுகிறார். மேலும், சிவம் துபேக்கு பதிலாக குல்வந்த் கெஜோலிரியா இன்றைய போட்டியில் அறிமுகம் ஆகிறார்.

அணி வீரர்கள்

அணி வீரர்கள்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீரர்கள்: விராட் கோலி (கேப்டன்), டி வில்லியர்ஸ், ஹென்ரிக் கிளாசென், குர்கீரத் சிங் மன், மார்கஸ் ஸ்டோனிஸ், பவன் நேகி, உமேஷ் யாதவ், நவடிப் சைனி, குல்வந்த் கெஜோலிரியா, யூசுவெந்திர சாஹல்.

யார்? யார்?

யார்? யார்?

ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர்கள் விவரம்: அஜிங்கியா ரகானே, லியாம் லிவிங்ஸ்டன், சஞ்சு சாம்சன், ஸ்டீவன் ஸ்மித் (கேப்டன்), ரியான் பராக், ஸ்டூவர்ட் பின்னி, மஹிபல் லோம்ரோர், ஷீரியாஸ் கோபால், ஜெய்தேவ் உனட்கட், வருண் ஆரோன், ஓஷேன் தாமஸ்.

Story first published: Tuesday, April 30, 2019, 20:05 [IST]
Other articles published on Apr 30, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+