Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எனக்கா அணியில் இடமில்ல? பேட்டிங்கில் பொளந்த ரஜத் பட்டிதார்..192 ஸ்ட்ரைக் ரேட்டில் மிரட்டிவிட்டார்

இந்திய டி20 அணியில் இடம் கிடைக்காத ஏமாற்றத்தை ஓரங்கட்டிவிட்டு, மத்தியப் பிரதேச பிரிமியர் லீக் தொடரில் ரஜத் பட்டிதார் தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குவாலியர் சீட்டாஸ் மற்றும் மால்வா ஸ்டாலியன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில், பட்டிதார் தனது சிறப்பான பேட்டிங் மூலம் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றதுடன், 'ஆட்ட நாயகன்’ விருதையும் வென்றார்.

முதலில் பேட்டிங் செய்த குவாலியர் சீட்டாஸ் அணி, ஆரம்பத்தில் தடுமாறிய சூழலில் பட்டிதார் களமிறங்கினார். 30 பந்துகளை எதிர்கொண்ட அவர், 216.67 என்ற அதிரடி ஸ்டிரைக் ரேட்டில் 65 ரன்களைக் குவித்தார். இந்த இன்னிங்ஸில் 6 பவுண்டரிகளும், 4 சிக்ஸர்களும் அடங்கும். பார்த் சௌத்ரியுடன் 44 ரன்களையும், அர்பித் படேலுடன் 49 ரன்களையும் பார்ட்னர்ஷிப்பாகக் குவித்து, அணியின் ஸ்கோரை 190/7 என உயர்த்த உதவினார்.

ஐபிஎல் 2026 தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக 501 ரன்களைக் குவித்து, 192.69 என்ற ஸ்டிரைக் ரேட்டுடன் 42 சிக்ஸர்களை விளாசியிருந்தார் பட்டிதார். ஸ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷன் மற்றும் தீலக் வர்மா போன்ற வீரர்களை விடச் சிறந்த புள்ளிவிவரங்களைக் கொண்டிருந்த போதிலும், இந்திய டி20 அணியில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை.

IND vs AFG: வலுவான நிலையில் இந்தியா.. ஆப்காகிஸ்தான் திணறல்.. 3 நாளில் முடியுமா ஆட்டம்?

IND vs AFG: வலுவான நிலையில் இந்தியா.. ஆப்காகிஸ்தான் திணறல்.. 3 நாளில் முடியுமா ஆட்டம்?

இந்தச் சூழலில், அணியின் கேப்டன் பதவிக்கு சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக பட்டிதாரின் பெயரும் பரிசீலிக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியிருந்தன. இருப்பினும், தேர்வுக்குழு ஸ்ரேயாஸ் ஐயரைத் தேர்வு செய்து, பட்டிதாரைப் புறக்கணித்தது.

தேர்வுக்குழுவின் முடிவால் எந்தப் பாதிப்பும் அடையாதவராகக் களமிறங்கிய பட்டிதார், எதிரணி பந்துவீச்சைச் சின்னாபின்னமாக்கினார். 191 ரன்கள் என்ற இலக்கைத் துரத்திய மால்வா ஸ்டாலியன்ஸ் அணி, ஆட்டத்தின் தொடக்கத்திலிருந்தே திணறியது. குவாலியர் சீட்டாஸ் அணியின் சௌம்ய பாண்டே மற்றும் இஷான் அப்ரிடி தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி மிரட்ட, மால்வா ஸ்டாலியன்ஸ் அணி 139 ரன்களுக்குச் சுருண்டது.

வைபவ் சூர்யவன்ஷி தேர்வு செய்வது காலத்தின் கட்டாயம்.. இனி அவர் தான் எதிர்காலம்- அஜித் அகர்கர் கருத்து

வைபவ் சூர்யவன்ஷி தேர்வு செய்வது காலத்தின் கட்டாயம்.. இனி அவர் தான் எதிர்காலம்- அஜித் அகர்கர் கருத்து

இதன் மூலம் குவாலியர் சீட்டாஸ் அணி 51 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவு செய்தது. அணியின் வெற்றிக்கு வித்திட்ட ரஜத் பட்டியார், களத்தில் தனது திறமையை மீண்டும் ஒருமுறை நிரூபித்து, தேர்வுக்குழுவின் முகத்தில் கரியை பூசினார்.

Story first published: Sunday, June 7, 2026, 21:26 [IST]
Other articles published on Jun 7, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+