
ஆஸ்திரேலியா முன்னிலை
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான பகலிரவு போட்டியுடன் கூடிய 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. முதலில் விளையாடப்பட்ட பகலிரவு போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வி அடைந்துள்ளது. இதையடுத்து ஆஸ்திரேலியா 4க்கு 1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இந்தியா சொதப்பல்
இந்த போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் 36 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இந்தியா அதிர்ச்சி தோல்வி அடைந்துள்ளது. இதையடுத்து அடுத்ததாக நடைபெறவுள்ள 3 போட்டிகளை கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் இந்தியாவின் செயல்பாடு குறித்து கேள்வி எழுந்துள்ளது.

சுக்லா விளக்கம்
இந்நிலையில் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி மற்றும் செயலாளர் ஜெய் ஷா ஆகியோர் இந்திய பேட்டிங் குறித்து கவலை கொண்டுள்ளதாக பிசிசிஐ துணை தலைவராக நியமிக்கப்படவுள்ள ராஜிவ் சுக்லா தெரிவித்துள்ளார். இந்திய அணியின் செயல்பாட்டை மேம்படுத்தும்வகையில் அவர்கள் சில திட்டங்களை மேற்கொண்டுள்ளதாகவும் சுக்லா கூறியுள்ளார்.

சுக்லா நம்பிக்கை
அடுத்த போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். பகலிரவு போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி சிறப்பாக விளையாடியதை சுட்டிக் காட்டிய சுக்லா, இரண்டாவது இன்னிங்சில் ஏற்பட்டது போல சில நேரங்களில் நடக்கும் என்றும் கூறினார்.

வீரர்கள் கருத்தில் கொள்ள வேண்டும்
இந்திய வீரர்களின் திறனை முன்னேற்றும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும்நிலையில், மெல்போர்னின் விக்கெட் கண்டீஷனை கருத்தில் கொண்டு இந்திய வீரர்கள் செயல்பட வேண்டும் என்றும் சுக்லா குறிப்பிட்டுள்ளார். அணி வீரர்களை பயற்றுவிக்கும் வகையில் டிராவிட் உள்ளிட்ட யாரும் அனுப்பப்பட மாட்டார்கள் என்றும் அதற்கு தேவையில்லை என்றும் அவர் மேலும் கூறினார்.


Click it and Unblock the Notifications











