ஐபிஎல் தலைவராகிறார் ராஜீவ் சுக்லா! சீனிவாசன்-ஜக்மோகன் டால்மியா பிளவால் அடித்தது ஜாக்பாட்!!
டெல்லி: ஐபிஎல் தலைவராக ராஜீவ் சுக்லாவை தேர்ந்தெடுக்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் முடிவு செய்துள்ளது.
முதல் மூன்று சீசன்களிலும் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) தலைவராக லலித் மோடி. ஐபிஎல் போட்டிகளை உலக அளவில் கவனம் ஈர்க்க செய்ததில் லலித் மோடி பங்களிப்பு அபாரம். ஆனால், லலித் மோடி, ஊழல் புகார்களால் பதவி விலகிய நிலையில், எந்த ஒரு கிரிக்கெட் வாரியத்திலும் பொறுப்புக்கு வரமுடியாதபடி ஆயுட் கால தடை விதித்தது பிசிசிஐ.

பிசிசிஐ ஆலோசனை
இதன்பிறகு ஐபிஎல் தலைவர் பதவி ரோலர் கோஸ்டர் போல சுற்றிவருகிறது. 2013ல் பிஸ்வால் தலைவராக பதவிக்கு வந்த நிலையில், இந்த சீசனுக்கான தலைவரை தேர்ந்தெடுக்க பிசிசிஐயில் ஆலோசனைகள் நடந்தன.

கருத்து மோதல்
இதில், சீனிவாசன் பிஸ்வாலுக்கு ஆதரவாகவும், சரத்பவார் அஜய் ஷிர்கேவுக்கு ஆதரவாகவும், பிசிசிஐ தலைவரான ஜக்மோகன் டால்மியா, சவுரவ் கங்குலிக்கு ஆதரவாகவும் பரிந்து பேசியதாக கூறப்படுகிறது.

ராஜீவ் சுக்லாவுக்கு ஜாக்பாட்
மூன்று தரப்புமே தங்கள் முடிவில் உறுதியாக இருந்த நிலையில், கருத்தொற்றுமை அடிப்படையில், ராஜீவ் சுக்லாவை ஐபிஎல் தலைவராக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அறிவிப்பு
பிசிசிஐ இந்த அறிவிப்பை இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. அநேகமாக இன்று அறிவிப்பு வெளியாகலாம் என்றாலும், பிசிசிஐ வட்டாரங்களின் உறுதியான தகவல் இதுதான். காங்கிரசை சேர்ந்த, ராஜீவ்சுக்லா முன்னாள் மத்திய அமைச்சர் என்பதும், இதற்கு முன்பாக ஐபிஎல் தலைவராக பதவி வகித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications