Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கிரிக்கெட் ஜாம்பவான் ராஜேந்தர் கோயல் மறைவு... வயதுமூப்பு காரணமாக உயிரிழப்பு

டெல்லி :உள்ளூர் கிரிக்கெட்டில் ஜாம்பவானாக திகழ்ந்த ராஜேந்தர் கோயல் தனது 77வது வயதில் உடல்நிலை பாதிப்பால் மரணமடைந்துள்ளார்.

முதல்தர கிரிக்கெட் வீரராக விளையாடியுள்ள ராஜேந்தர் கோயல், உள்ளூர் போட்டிகளில் நடுவராகவும் செயல்பட்டுள்ளார்.

பிசிசிஐ-யின் சிகே. நாயுடு வாழ்நாள் சாதனையாளர் விருதை பெற்றுள்ள ராஜேந்தர் கோயல், ஹரியானா மற்றும் வடக்கு மண்டலத்திற்காக உள்ளூர் போட்டிகளில் பங்கேற்று விளையாடியுள்ளார்.

உடல்நிலை பாதிப்பால் மறைவு

உடல்நிலை பாதிப்பால் மறைவு

உள்ளூர் கிரிக்கெட்டில் ஜாம்பவானாக திகழ்ந்த ராஜேந்தர் கோயல் தனது 77வது வயதில் உடல்நிலை பாதிப்பால் மரணமடைந்துள்ளார். ஹரியானா மற்றும் வடக்கு மண்டலத்திற்காக உள்ளூர் போட்டிகளில் விளையாடியுள்ள ராஜேந்தர் கோயல், 157 போட்டிகளில் விளையாடி 750 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

44வது வயதில் ஓய்வு

44வது வயதில் ஓய்வு

முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ள கோயல் உள்ளூர் போட்டிகளில் நடுவராகவும் செயல்பட்டுள்ளார். பிசிசிஐயின் சிகே. நாயுடு வாழ்நாள் சாதனையாளர் விருதினை பெற்றுள்ளார். தன்னுடைய 44 வயதுவரை தீவிரமாக கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று விளையாடியுள்ள கோயல், அதையடுத்து சிறந்த நடுவராக திகழ்ந்தார்.

முன்னாள் பிசிசிஐ தலைவர் இரங்கல்

முன்னாள் பிசிசிஐ தலைவர் இரங்கல்

மிகச்சிறந்த இடதுகை ஸ்பின்னராக திகழ்ந்த கோயலின் மறைவு கிரிக்கெட்டிற்கு மட்டுமின்றி தனிப்பட்ட முறையில் தனக்கும் மிகப்பெரிய இழப்பு என்று முன்னாள் பிசிசிஐ தலைவர் ரன்பீர் சிங் மகேந்திரா வருத்தம் தெரிவித்துள்ளார். தனது ஓய்விற்கு பிறகு அவரது செயல்பாடு மிகச்சிறந்ததாக இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

கிரிக்கெட் பிரபலங்கள் இரங்கல்

தன்னுடைய மனைவி மற்றும் மகன் நிதின் கோயலுடன் வாழ்ந்துவந்த ராஜேந்தர் கோயல், கடந்த சில மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், அவருடைய உடல்நிலை மோசமாக பாதிக்கப்பட்டு, அவர் மரணமடைந்துள்ளார். அவருக்கு பல்வேறு கிரிக்கெட் பிரபலங்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Story first published: Monday, June 22, 2020, 10:46 [IST]
Other articles published on Jun 22, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+