தோனிக்காக ரஜினி செய்த காரியம்..!! சூப்பர் ஸ்டாரிடம் இருந்து கிடைத்த சூப்பர் பாராட்டு
சென்னை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி அவெஞ்சர்ஸ் போல் புதிய சூப்பர் ஹீரோவாக உருவெடுத்துள்ளார்.
மார்வெல் காமிக்ஸ் போல் தோனியின் சொந்த நிறுவனம் ஒன்று காமிக்ஸ் தயாரித்துள்ளது. காமிக்ஸ் என்றால் புத்தகமாக தானே வரும்.
ஆனால் இது அனிமேஷனாக அமேசானில் வெளிவர உள்ளது. தற்போது இந்த புத்தகத்தின் முன்னோட்டத்தை தோனி வெளியிட்டுள்ளார்.

தோனியின் நிறுவனம்
தோனி எண்டர்டைமன்ட் என்ற நிறுவனம் இந்த புதிய கிராபிக் நாவலை வெளியிட்டுள்ளது. ரமேஷ் தமிழ்மணி என்ற தமிழர் கடந்த 2020ஆம் ஆண்டு ஒரு நாவலை எழுதினார். அதில் பண்டைய காலத்தில் மையமாக வைத்தும், அறிவியல் ரீதியாகவும் (ஏழாம் அறிவு போல் தான்) இந்த நாவல் எழுதப்பட்டுள்ளது.

என்ன கதை?
அதர்வா என்று பெரியடப்பட்டுள்ள இந்த அனிமேஷன் காமிக்சில் தோனி ஒரு அகோரியாக நடக்கிறார். அகோரியாக இருக்கும் தோனியை பிடித்து ஒரு விஞ்ஞானி ஆராய்ச்சி செய்கிறார். அப்போது பண்டைய காலத்தில் அகோரியின் சக்தி, வரலாறு தோனியின் மூலம் வெளிப்படுகிறது. அதன் பின் என்ன நடக்கிறது என்பது தான் கதை.

அனிமேஷன் புத்தகம்
இந்த புத்தகத்தின் விலை 1499 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த புத்தகத்தை படிக்க ஒரு மொபைல் செயலியும் பதிவிறக்கம் செய்ய வேண்டும். புத்தக பக்கங்ளில் இருக்கும் பார் கோர்டை ஸ்கேன் செய்தால், நமக்கு அந்த காட்சியின் வீடியோ நமக்கு செல்போனில் தோன்றும். மேலும், தோனியின் 3டி உருவமும் நமக்கு அனிமேஷனில் தெரியும்.
Recommended Video

ரஜினி வெளியீடு
இந்த நிலையில் அதர்வா புத்தகத்தின் அட்டை படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று அவரது இல்லத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புதிய முயற்சியை பாராட்டியுள்ள ரஜினி, தோனியையும் செல்போனில் அழைத்து வாழ்த்து கூறியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், ஆக்குவமென் படத்தில் வரும் நாயகன் கதாபாத்திரத்தை காப்பி அடித்தது போல் தோனியின் உருவம் இருப்பதாக ரசிகர்கள் சிலர் விமர்சித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications