இந்தியா - இலங்கை 3வது டி20.. சவால் கொடுக்கும் ராஜ்கோட் பிட்ச்.. இம்முறை ரிஸ்க் எடுக்காதீங்க பாண்ட்யா
ராஜ்கோட்: இலங்கை அணியுடனான 3வது டி20 போட்டியில் இந்திய அணி சில விஷயங்களை செய்தால் மட்டுமே வெற்றி பெற முடியும் என கணிக்கப்பட்டுள்ளது. அதுவும் ஹர்திக்கின் ரிஸ்க் முயற்சிகள் இங்கு பலிக்காது.
இரு அணிகளும் மோதும் 3வது போட்டி ராஜ்கோட்டில் உள்ள மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு தொடங்கவுள்ளது. இந்த தொடரில் ஏற்கனவே இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் சமநிலையில் உள்ள சூழலில் வெற்றியாளர் இன்று தீர்மானிக்கப்படவுள்ளது.
2023ம் ஆண்டின் முதல் தொடரை யார் வெற்றியுடன் முடிப்பது என இரு அணி வீரர்களும் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி மைதானம் யாருக்கு சாதகமாக இருக்கப்போகிறது என்பதை பார்க்கலாம்.

மைதானத்தின் தன்மை
போட்டி நடைபெறும் சௌராஷ்டிரா கிரிக்கெட் சங்கத்தின் மைதானம் பேட்ஸ்மேன்களுக்கு உதவக்கூடிய ஒன்றாகும். இங்கு பவுண்டரி எல்லைகளும் சற்று அருகிலேயே இருக்கும் என்பதால் அதிக ரன்கள் செல்வதையும் பார்க்கலாம். ஆனால் பவுலிங்கை பொறுத்தவரையில் இங்கு ஸ்பின்னர்களின் பாட்சா தான் எடுபடும். வேகப்பந்துவீச்சாளர்களால் பெரியளவில் எதுவும் செய்ய முடியாது.

பிட்ச் நிலைமை
பிட்ச் நன்கு வரண்டு காணப்படும் என்பதால் சுழற்பந்துவீச்சாளர்கள் தாக்கத்தை ஏற்படுத்தலாம். அதுவும் ஆட்டத்தின் முதல் சில ஓவர்களுக்குள் விக்கெட்களை எடுத்துக்கொண்டால் தான் எதிரணி பேட்ஸ்மேன்களை கட்டுப்படுத்த முடியும். வேகப்பந்துவீச்சாளர்களிடம் இருந்து ஸ்லோயர் பந்துகளை அதிகளவில் எதிர்பார்க்கலாம்.

டாஸில் என்ன செய்யனும்?
இந்த களத்தில் இதுவரை 4 சர்வதேச டி20 போட்டிகள் நடந்துள்ளன. இதில் முதலில் பேட்டிங் செய்த அணி 2 முறையும், 2வது பேட்டிங் செய்யும் அணி 2 முறையும் வென்றுள்ளன. எனினும் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமானது என்பதால், டாஸ் வெல்லும் அணி பவுலிங்கை தேர்வு செய்வது நல்லது என வல்லுநர்கள் கூறுகின்றனர். பிட்ச் புதிதாக இருக்கும் போதே எதிரணியை குறைந்த ரன்னுக்கு சுருட்டலாம்.

கடும் சவால்
இலங்கை அணியில் ஹசரங்கா மற்றும் தீக்ஷனா என இரண்டு அச்சுறுத்தல் ஸ்பின்னர்கள் இருக்கின்றனர். இந்திய அணியில் அக்ஷர் மற்றும் சாஹல் இருந்தாலும் கூடுதலாக வாஷிங்டன் சுந்தரை அணிக்குள் கொண்டு வருவார்கள் எனத் தெரிகிறது. கடந்த போட்டியில் நோ பால்களாக போட்டு சொதப்பிய அர்ஷ்தீப் சிங் வெளியேற்றப்படலாம்.


Click it and Unblock the Notifications