டெல்லி: 18 வயதுக்குட்பட்டோருக்கான ஹாக்கி அரையிறுதி போட்டியில் நேற்று இரவு பாகிஸ்தானை இந்தியா தோற்கடித்தது. ராணுவ ரீதியிலான வெற்றியை தொடர்ந்து, தேசிய விளையாட்டான ஹாக்கியிலும் இந்தியா சாதித்ததை நாட்டின் உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் வித்தியாசமாக கொண்டாடினார்.

அவர் டிவிட்டரில் கூறுகையில், இந்திய 18 வயதுக்குட்பட்டோர் ஹாக்கி அணி ஆசிய கோப்பை அரையிறுதியில் surgical precision வெற்றியை பெற்றுள்ளது என குறிப்பிட்டார். இந்த டிவிட்டை 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் ரீ டிவிட் செய்து மகிழ்ச்சி வெளிப்படுத்தியுள்ளனர்.
இந்தியாவை பெருமைப்படுத்தியதியதற்காக வீரர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அந்த டிவிட்டில் மேலும் கூறிப்பிட்டுள்ளார் ராஜ்நாத்சிங். பாகிஸ்தானில் நடைபெற்ற சர்ஜிகல் தாக்குதலை குறிப்பிட்டு, ராஜ்நாத் இவ்வாறு கூறியிருந்தார்.
நேற்றைய அரையிறுதியில் இந்தியா 3-1 என்ற கணக்கில் பாகிஸ்தானை வென்றுள்ளது. பைனலில் வங்கதேசத்தை வீழ்த்த காத்திருக்கிறது இந்தியா.