Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டெஸ்ட் மேட்ச் விளையாடாத டோணிக்கு எதற்கு 'ஏ கிரேடு' சம்பளம்? விளாசிய ராமச்சந்திர குஹா

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியில் சூப்பர் ஸ்டார் நோய் இருப்பதாக பிசிசிஐ நிர்வாக கமிட்டியிலிருந்து ராஜினாமா செய்த ராமச்சந்திர குஹா பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். டோணியை அவர் சாடியுள்ளார்.

பிசிசிஐ நிர்வாகத்தில் நடக்கும் குழறுபடிகளை சீர் செய்ய உச்சநீதிமன்றத்தின் அறிவுரைப்படி உருவாக்கப்பட்டதுதான், நிர்வாக கமிட்டி (COA). இதில் வரலாற்று ஆய்வாளர் ராமச்சந்திர குஹா ஒரு நிர்வாகியாகும்.

அதாவது, சுப்ரீம் கோர்ட்டால் நியமிக்கப்பட்ட 4 நிர்வாகிகளில் ஒருவர் ஆவார். தனது ராஜினாமா கடிதத்தை அவர் நிர்வாக குழு தலைவர் வினோத் ராயிடம் வழங்கினார்.

கடிதம்

கடிதம்

தனது ராஜினாமாவுக்கான காரணத்தை வினோத் ராய்க்கு விவரமாக கடிதமாக எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் இந்திய அணியில் சூப்பர் ஸ்டார் நோய் இருப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.

சூப்பர் ஸ்டார்

சூப்பர் ஸ்டார்

டெஸ்ட் போட்டிகள் ஆடாத டோணிக்கு ஏ கிரேட் கான்டிராக்ட் வழங்கப்பட்டுள்ளது சரியல்ல. இது சூப்பர் ஸ்டார் நோய் பீடித்துள்ளதன் அடையாளம்தான். இந்திய கிரிக்கெட் கான்டிராக்ட் சிஸ்டத்தையே இந்த சூப்பர் ஸ்டார் நோய் பாதித்துள்ளது.

ஏ கிரேடு

ஏ கிரேடு

டோணி அவராகவே முன்வந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவதி்தார். அவருக்கு ஏ கிரேடு வீரர் என்ற வகையில் அதிக ஊதியம் அளிக்கப்பட்டு வருவது தவறான முன் உதாரணம்.

கும்ப்ளே விவகாரம்

கும்ப்ளே விவகாரம்

அனில்கும்ப்ளே பயிற்சியாளரான பிறகு இந்திய கிரிக்கெட் அணி சிறப்பாக வெற்றி பெற்று வந்துள்ளது. இருப்பினும், அவரது பதவிக்காலத்தை நீடிக்கவில்லை. இது சரியான நடவடிக்கை இல்லை. தொழில் பக்குவத்தோடு ரீதியாக பிசிசிஐ நடந்து கொள்ளவில்லை.

மோசமான நடவடிக்கை

மோசமான நடவடிக்கை

கும்ப்ளே பதவிக்காலம் முடிவடையும் முன்பே அவரை பதவியிலிருந்து நீக்கும் வகையிலான செயல்பாடுகள்தான் பிசிசிஐ மூலம் முன்னெடுக்கப்படுவதாக தெரிகிறது. இவ்வாறு குஹா குற்றம்சாட்டியுள்ளார்.

Story first published: Friday, June 2, 2017, 15:44 [IST]
Other articles published on Jun 2, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+