கம்பெனி நடத்திக்கொண்டு கமெண்டரியும் செய்யும் கவாஸ்கர்.. ராமச்சந்திர குஹா கடும் விமர்சனம்
மும்பை: இந்திய கிரிக்கெட் அணியில் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் ஆதிக்கம் இருப்பதாக பிசிசிஐ நிர்வாக கமிட்டியிலிருந்து ராஜினாமா செய்த ராமச்சந்திர குஹா பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.
பிசிசிஐ நிர்வாகத்தில் நடக்கும் குழறுபடிகளை சீர் செய்ய உச்சநீதிமன்றத்தின் அறிவுரைப்படி 4 நிர்வாகிகள் கொண்ட நிர்வாக கமிட்டி (COA) உருவாக்கப்பட்டுள்ளது. இதில் வரலாற்று ஆய்வாளர் ராமச்சந்திர குஹா 4 நிர்வாகிகளில் ஒருவர் ஆவார்.
இந்த நிலையில் தனது பதவியை ராமச்சந்திர குஹா ராஜினாமா செய்துள்ளார். அந்த கடிதத்தை அவர் நிர்வாக குழு தலைவர் வினோத் ராயிடம் வழங்கினார்.

கவாஸ்கர் ஆதிக்கம்
தனது ராஜினாமாவுக்கான காரணத்தை வினோத் ராய்க்கு விவரமாக கடிதமாக எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் இந்திய அணியில் ஆதிக்கம் செலுத்துவது குறித்து குற்றம்சாட்டியுள்ளார்.

டோணி, கும்ப்ளே
டெஸ்ட் போட்டிகள் ஆடாத டோணிக்கு ஏ கிரேட் கான்டிராக்ட் வழங்கப்பட்டுள்ளது குறித்தும் ராமச்சந்திர குஹா தனது கடிதத்தில் குற்றம்சாட்டியுள்ளார். பயிற்சியாளர் அனில்கும்ப்ளே பதவிக்காலத்தை நீடிக்காமல் இழுத்தடித்ததிலும், பிசிசிஐ சரியாக நடந்துகொள்ளவில்லை என குற்றம்சாட்டியுள்ளார்.

கவாஸ்கரின் கம்பெனி
கவாஸ்கர் குறித்து கூறுகையில், இந்திய கிரிக்கெட் வீரர்களை மேலாண்மை செய்யும் வகையில், கவாஸ்கர் புரொபஷனல் மேனேஜ்மென்ட் குரூப் என்ற பெயரில் நிறுவனம் நடத்தி வருகிறார். அதேநேரம், அவர் பிசிசியின் வர்ணனையாளர் குழுவிலும் இடம் பெற்றுள்ளார். இது நோக்கத்தின் முரண்பாடு ஆகும். அவர் இரண்டில் ஒரு பதவியை இழக்க வேண்டும் என குஹா தெரிவித்துள்ளார்.

நாளிதழ் செய்தி
மேலும், கவாஸ்ககர் நடத்தும் மேலாண்மை நிறுவனம் இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவானுடன் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது குறித்து வெளியான நாளிதழ் செய்தியையும் தனது கடிதத்தோடு குஹா இணைத்துள்ளார்.


Click it and Unblock the Notifications