Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ராகுல் டிராவிட்டும் இப்படியா... ராமச்சந்திர குஹா கடிதத்தில் விளாசல்

மும்பை: இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் வீரர் ராகுல் டிராவிட்டிற்கு பிசிசிஐ அளிக்கும் சலுகையை சாடியுள்ளார் ராமச்சந்திர குஹா.

பிசிசிஐ நிர்வாகத்தில் நடக்கும் குழறுபடிகளை சீர் செய்ய உச்சநீதிமன்றத்தின் அறிவுரைப்படி 4 நிர்வாகிகள் கொண்ட நிர்வாக கமிட்டி (COA) உருவாக்கப்பட்டுள்ளது. இதில் வரலாற்று ஆய்வாளர் ராமச்சந்திர குஹா 4 நிர்வாகிகளில் ஒருவர் ஆவார்.

இந்த நிலையில் தனது பதவியை ராமச்சந்திர குஹா ராஜினாமா செய்துள்ளார். அந்த கடிதத்தை அவர் நிர்வாக குழு தலைவர் வினோத் ராயிடம் வழங்கினார்.

பல குற்றச்சாட்டுகள்

பல குற்றச்சாட்டுகள்

தனது ராஜினாமாவுக்கான காரணத்தை வினோத் ராய்க்கு விவரமாக கடிதமாக எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் இந்திய அணியில் ஆதிக்கம் செலுத்துவது, டோணிக்கு ஏ கிரேடு வீரருக்கான ஊதியம் தருவது, டிராவிட்டிற்கு சலுகை தருவது பற்றியெல்லாம் குற்றம்சாட்டியுள்ளார்.

கும்ப்ளேவுக்கு ஆதரவு

கும்ப்ளேவுக்கு ஆதரவு

டெஸ்ட் போட்டிகள் ஆடாத டோணிக்கு ஏ கிரேட் கான்டிராக்ட் வழங்கப்பட்டுள்ளது குறித்து ராமச்சந்திர குஹா தனது கடிதத்தில் குற்றம்சாட்டியுள்ள அதே நேரத்தில் பயிற்சியாளர் அனில்கும்ப்ளே பதவிக்காலத்தை நீடிக்காமல் இழுத்தடித்ததிலும், பிசிசிஐ சரியாக நடந்துகொள்ளவில்லை என குற்றம்சாட்டியுள்ளார்.

சிலருக்கு சலுகை

சிலருக்கு சலுகை

ராமச்சந்திர குஹா கூறியுள்ளதாவது: கமிட்டி தனது பணியை ஆரம்பித்த காலத்தில் இருந்தே, இரட்டை ஈடுபாட்டுக்கு பிசிசிஐ சிலருக்கு மட்டும் அனுமதி வழங்கியுள்ளது. இதை நான் திரும்ப, திரும்ப பார்த்துள்ளேன்.

2 மாதங்கள் ஓய்வு

2 மாதங்கள் ஓய்வு

உதாரணத்திற்கு, சில தேசிய பயிற்சியாளர்களுக்கு சலுகைகளை வழங்குகிறது. தேசிய பணிக்காக 10 மாதங்களை ஒதுக்கும் பிசிசிஐ, எஞ்சிய 2 மாதங்களை ஐபிஎல் அணிகளுக்கு பயிற்சியாளராகவோ அல்லது, அறிவுரையாளராகவோ இருக்க அனுமதிக்கிறது.

சூப்பர் ஸ்டார்

சூப்பர் ஸ்டார்

பிசிசிஐ அமைத்துள்ள ஒப்பந்தத்தில் சட்டத்தின் ஓட்டைகள் அளிக்கப்பட்டுள்ளன. அதன் வழியாக சூப்பர் ஸ்டார் அந்தஸ்திலுள்ள வீரர்கள் தப்பிவிடுகிறார்கள். இவ்வாறு குஹா தெரிவித்துள்ளார்.

ராகுல் டிராவிட்

ராகுல் டிராவிட்

ராகுல் டிராவிட் இந்தியா ஏ அணி பயிற்சியாளராக உள்ளார். அதேபோல 19 வயதுக்கு உட்பட்டோர் அணி பயிற்சியாளராகவும் உள்ளார். அதே நேரம் ஐபிஎல் தொடரின்போது டெல்லி அணி பயிற்சியாளராகவும் உள்ளார். அவருக்கு போதிய அளவுக்கு நேரம் கிடைப்பதுதான் இதற்கு காரணம். தேசிய அணியின் நலனைவிட ஐபிஎல் அணிக்காக நேரம் ஒதுக்க ராகுல் டிராவிட்டிற்கு பிசிசிஐ வசதி செய்து கொடுப்பதையே குஹா குற்றம்சாட்டியுள்ளார்.

Story first published: Saturday, June 3, 2017, 15:35 [IST]
Other articles published on Jun 3, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+