For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சச்சினின் குரு ராமகன்ட் அச்ரேகர் மறைவு.. கண்ணீரில் சச்சின்.. வருத்தத்தில் இந்திய கிரிக்கெட்

Recommended Video

சச்சினின் குரு ராமகன்ட் அச்ரேகர் 87 வயதில் மறைவு- வீடியோ

மும்பை : சச்சினின் பால்ய கால பயிற்சியாளர் ராமகன்ட் அச்ரேகர் மும்பையில் கடந்த புதன்கிழமை (ஜனவரி 2), தன் 87 வயதில், வயது மூப்பின் காரணமாக இயற்கை எய்தினார்.

அவருக்கு சச்சின், வினோத் காம்ப்ளி உள்ளிட்ட அவரது மாணவர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். பிசிசிஐ தனது இரங்கலை கூறியுள்ளது.

தனித்துவமிக்கவர் அச்ரேகர்

தனித்துவமிக்கவர் அச்ரேகர்

இந்திய கிரிக்கெட் வீரர்கள் பலரை உருவாக்கிய அச்ரேகர் பயிற்சியாளர்களில் தனித்துவமிக்கவராக திகழ்ந்தவர். சச்சின் தன் 16 வயதில் சர்வதேச கிரிக்கெட்டில் காலடி எடுத்து வைத்தார் என்றால் அவரது பயிற்சியாளர் அச்ரேகரின் திறமை என்ன என்பதை நாம் அறியலாம்.

துரோணாச்சாரியா விருது வென்றவர்

துரோணாச்சாரியா விருது வென்றவர்

ராமகன்ட் அச்ரேகர், துரோணாச்சாரியா விருது மற்றும் பத்மஸ்ரீ விருது வென்றவர் ஆவார். ஒரே ஒரு முதல் தர கிரிக்கெட் போட்டியில் மட்டுமே ஆடியுள்ள அச்ரேகர், கண்டிப்பான கிரிக்கெட் பயிற்சியாளராக திகழ்ந்தார். பயிற்சி அளிப்பதில் தனி முத்திரை பதித்தார்.

சொர்க்கத்தின் கிரிக்கெட் மேம்படும்

சொர்க்கத்தின் கிரிக்கெட் மேம்படும்

சச்சின் தன் இரங்கல் செய்தியில், "சொர்க்கத்தின் கிரிக்கெட் அச்ரேகரால் மேம்படும்" என கூறினார். மேலும், அவர் போட்டுக் கொடுத்த அடித்தளத்தில் தான் நான் நின்று கொண்டு இருக்கிறேன் என குறிப்பிட்டார் சச்சின். சச்சின் எத்தனை பெரிய இடத்திற்கு சென்றாலும் தன் குருவை மறக்கவில்லை என்பதில் இருந்தே ராமகன்ட் எத்தகைய தாக்கம் நிறைந்த ஒரு பயிற்சியாளர் என்பதை நாம் உணர முடியும்.

அதிர்ச்சி அடைந்தனர்

அதிர்ச்சி அடைந்தனர்

கடந்த மாதம் சச்சின் மற்றும் பழைய மாணவர்கள் சிலர் ராமகன்ட் அச்ரேகரை சந்தித்து பேசி சிரித்து மகிழ்ந்துள்ளனர். தற்போது அவரது மரணம் அவரது பழைய மாணவர்கள் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. தற்போதைய இந்திய கிரிக்கெட் வீரர்களும் தங்கள் இரங்கலை தெரிவித்துக் கொண்டுள்ளனர்.

Story first published: Thursday, January 3, 2019, 10:55 [IST]
Other articles published on Jan 3, 2019
English summary
Ramakant Achrekar passed away in Mumbai. He is the coach of Sachin Tendulkar and many Indian cricketers.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+