ஸ்டார் வீராங்கனையை கண்ணீர் சிந்த வைத்த சர்ச்சை பயிற்சியாளர்..!! இப்ப அவரு நிலைமையை பாருங்க..?
மும்பை: டிராவிட்டை தொடர்ந்து இந்திய ஏ அணியின் பயிற்சியாளராக ரமேஷ் பவார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
செப்டம்பரில் தென் ஆப்ரிக்க ஏ அணி, இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து இந்திய ஏ அணியுடன் விளையாடுகிறது. தொடருக்கு மட்டும் ரமேஷ் பவார், பந்துவீச்சுப் பயிற்சியாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
ரமேஷ் பவார், இந்திய அணிக்காக இரு டெஸ்டுகள், 31 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடி உள்ளார். ஜூலை 2018ல் இந்திய மகளிர் அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். மகளிர் உலக கோப்பை டி20 அரையிறுதியில் மிதாலி ராஜ் சேர்க்கப்படவில்லை.

பரபரப்பான புகார்
எனவே, அவருக்கும், பயிற்சியாளர் ரமேஷ் பவாருக்கும் பிரச்னை ஏற்பட்டது. மனம் உடைந்து கண்ணீர் சிந்திய மிதாலிராஜ் பரபரப்பான புகார்களை தெரிவித்தார். இங்கிலாந்துக்கு எதிரான அரைஇறுதி ஆட்டத்தில் தன்னை வேண்டுமென்றே அவர் நீக்கியதாக கூறினார்.

விளக்கம் அளித்த பவார்
அதனால் பயிற்சியாளர் ரமேஷ் பவாருக்கு சிக்கல் எழுந்தது. இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைமை செயல் அதிகாரி ராகுல் ஜோரி, பொது மேலாளர் சபா கரிம் ஆகியோரை சந்தித்து விளக்கம் அளித்தார்.

கடினம் என கருத்து
மிதாலிராஜ் எப்போதும் மற்றவர்களிடம் இருந்து ஒதுங்கியே இருந்தார். கையாளுவது கடினமாக இருந்தது என்று பவார் கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளிடம் தெரிவித்தார். அவரது பதவி காலம் முடிந்ததால், இந்திய மகளிர் அணி பயிற்சியாளராக தமிழக வீரர் டபிள்யு வி.ராமன் நியமிக்கப் பட்டார்.

ஒருநாள், டெஸ்ட்
தென் ஆப்ரிக்கா ஏ அணி இந்தியா வந்து 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் 4 நாட்கள் கொண்ட 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. அப்போது இவர் பயிற்சியாளராக பொறுப்பேற்பார்.


Click it and Unblock the Notifications