Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எங்க நாட்டுக்கு நல்ல ஸ்பின்னர்கள் தேவை.. நீங்க தான் பயிற்சி தரனும்.. பிரபல வீரருக்கு ஆஸி, அழைப்பு

ராஜ்கோட்: இந்திய அணியின் முன்னாள் ஆஃப்-ஸ்பின்னர் ரமேஷ் பவார், ஆஸ்திரேலியா 19 வயதுக்குட்பட்டோர் கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு பயிற்சியாளராக சில நாட்கள் பணியாற்றுகிறார். ராஜ்கோட்டில் உள்ள நிரஞ்சன் ஷா மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆஸ்திரேலிய ஜூனியர் அணியின் பயிற்சி ஆட்டங்களின் போது பவார் கலந்துகொண்டு, ஆஸ்திரேலியாவின் இளம் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு பயனுள்ள ஆலோசனைகளை வழங்கினார்.

கடந்த 2018 ஜூன் மாதம் பிரிஸ்பேனில் உள்ள சிஏ-வின் சிறந்த மேம்பாட்டு மையத்தில் ஆஸ்திரேலியாவின் 23 வயதுக்குட்பட்ட சுழற்பந்து வீச்சாளர்களுக்கு பயிற்சி அளிக்க சிஏ-வின் அழைப்பை ஏற்று அவர் சென்றிருந்தார். ஆஸ்திரேலிய அணியில் தாக்கத்தை ஏற்படுத்த கூடிய ஸ்பின்னர் இல்லாததால், புதிய தலைமுறை ஸ்பின்னர்களை உருவாக்க அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் முடிவு எடுத்துள்ளது.

Ramesh Powar

இது குறித்து பேசிய அவர், "சில மாதங்களுக்கு முன்பே கிரிக்கெட் ஆஸ்திரேலியா என்னை அணுகி, அவர்களின் இளம் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு வழிகாட்டுமாறு கேட்டுக்கொண்டது. இதற்கு முன்பும் நான் ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர்களுக்கு பயிற்சி அளித்துள்ளேன். எனவே, அவர்களின் இளம் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு நான் எவ்வாறு உதவ முடியும் என்பது குறித்து அவர்களுக்கு நல்ல புரிதல் உள்ளது. இது முன்கூட்டியே ஒப்புக்கொண்ட ஒரு விஷயம் என்பதால், அவர்களுடன் நான்கு நாட்கள் செலவிட முடிவு செய்தேன்," என்று தெரிவித்தார்.

அபிஷேக், வைபவ் சூர்யவன்ஷி இந்தியாவில் சிங்கமாகவும், வெளிநாட்டில் பூனையாகவும் இருக்க கூடாது- சந்தீப்

அபிஷேக், வைபவ் சூர்யவன்ஷி இந்தியாவில் சிங்கமாகவும், வெளிநாட்டில் பூனையாகவும் இருக்க கூடாது- சந்தீப்

சனிக்கிழமையன்று ஆஸ்திரேலிய அணியுடன் இணைந்த பவார், புதன்கிழமை இந்தியாவுக்கு எதிராக நடைபெறும் இறுதி இளையோர் ஒருநாள் போட்டி வரை அந்த அணியுடன் இணைந்து செயல்படுவார். இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான 19 வயதுக்குட்பட்டோருக்கான ஒருநாள் தொடரின் முதல் போட்டி கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது.இதில் இந்தியா 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அடுத்த இரண்டு போட்டிகள் முறையே திங்கள் மற்றும் புதன்கிழமை நடைபெற உள்ளன.

பிசிசிஐ-யின் ஜூனியர் தேர்வாளர் பதவிக்கு பவார் விண்ணப்பித்துள்ளார். இருப்பினும், பிசிசிஐ இன்னும் இந்தப் பதவிக்கான நேர்காணல்களை நடத்தவில்லை. வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆண்டுப் பொதுக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பிசிசிஐ செயலாளர் தேவஜித் சய்கியா, தகுதியான வேட்பாளர்கள் பட்டியலிடப்பட்டு வருவதாகவும், அதன் பிறகு கிரிக்கெட் ஆலோசனைக் குழு அவர்களிடம் நேர்காணல் நடத்தி, அடுத்த 15 நாட்களுக்குள் இந்த தேர்வு செயல்முறையை முடிக்கும் என்றும் கூறியிருந்தார்.

விராட் கோலி, ரோகித் சர்மா இல்லை என்றாலும், இந்திய அணியில் பிரச்சினை இருக்காது.. EX கோட்ச் தாக்கு

Also Read

விராட் கோலி, ரோகித் சர்மா இல்லை என்றாலும், இந்திய அணியில் பிரச்சினை இருக்காது.. EX கோட்ச் தாக்கு

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளரான பவார், கடந்த மூன்று சீசன்களாக குஜராத் அணியின் தலைமை பயிற்சியாளராக பணியாற்றினார். மேலும், மார்ச் 2021 இல் மும்பை அணி விஜய் ஹசாரே கோப்பையை வெல்வதற்கும் அவர் பயிற்சியாளராகப் பங்களித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, September 21, 2026, 7:10 [IST]
Other articles published on Sep 21, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+