Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கோலியைப் பார்த்துட்டு டக்குன்னு திரும்புனீங்கன்னா.. அப்படியே ஹைதர் அலி.. ரமீஸ் ராஜா "அசாம்"!

கராச்சி: இந்தியாவின் விராட் கோலியைப் போலவே பாகிஸ்தானின் இளம் வீரர் ஹைதர் அலி இருப்பதாக முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் ரமீஸ் ராஜா கூறியுள்ளார்.

விராட் கோலி மாதிரி யார் இருக்கா பாஸ் உங்க டீம்ல என்று ரமீஸ் ராஜாவிடம் கேட்டதுமே அவர் சொன்ன பெயர்தான் இந்த ஹைதர் அலி. உண்மையில் பாகிஸ்தானில் மிகச் சிறந்த வீரராக தற்போது இருப்பவர் பாபர் அசாம்தான்.

கோலி மாதிரியே ஆடுகிறாரே என்ற பெயர் இவருக்கு உள்ளது. அவரையும் கோலியையும் ஒப்பிட்டுத்தான் பாகிஸ்தான் ரசிகர்கள் சிலாகிப்பது வழக்கம்.

கோலியா பாபர் அசாமா

கோலியா பாபர் அசாமா

ஆனால் ரமீஸ் ராஜாவிடம் கேட்டால் பாபர் அசாமை விட, விராட் கோலியை விட மிகச் சிறந்த வீரர் ஹைதர் அலிதான் என்று யு டர்ன் அடித்துள்ளார்.

உலக அரங்கில் இப்போது விராத் கோலிதான் மிகச் சிறந்த வீரர் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால் அவரைப் போல் யார் உள்ளனர் என்று கேட்டால் நிச்சயம் பாபரை சொல்லலாம்.

அசாம் அருமையான ஆட்டம்

அசாம் அருமையான ஆட்டம்

சமீப காலத்தில் விராட் கோலியைப் போலவே பாகிஸ்தானின் பாபரும் மிகச் சிறப்பாக ஆடி வருகிறார். மிகச் சிறந்த சர்வதேச வீரராக அவர் உருவெடுத்துள்ளார். அவருக்கும் விராட் கோலிக்கும் இடையே நிறைய ஒற்றுமைகளும் உள்ளனர். ஆனால் இந்த இருவரின் கலவையாக ஹைதர் அலி இருப்பதாக கூறியுள்ளார் ரமீஸ் ராஜா.

ஹைதர் அலியே பெஸ்ட்

ஹைதர் அலியே பெஸ்ட்

உள்ளூர் அணியான பெஷாவர் ஸால்மி அணியில் விளையாடி வருகிறார் ஹைதர் அலி. மிகவும் திறமையான இளம் வீரர். உலகத் தரத்திலான வீரராகவும் இவர் பரிமளித்து வருகிறார். இவரைத்தான் தற்போது புகழ்ந்துள்ளார் ரமீஸ் ராஜா. "ஹைதர் அலி விராத் கோலி மற்றும் பாபர் அசாமை பின்பற்றி தன்னை மேம்படுத்திக் கொண்டால் மிகச் சிறந்த வீரராக வர முடியும். அவருக்கு நிறைய திறமை உள்ளது என்று கூறியுள்ளார் ரமீஸ் ராஜா.

ஹைதர் அலி சிறந்த வீரர்

ஹைதர் அலி சிறந்த வீரர்

"தனது முதல் பிஎஸ்எல் சீசனிலேயே தன்னை நிரூபித்தவர் ஹைதர் அலி. சுயம்புவாக உருவெடுத்தவர் அவர். மிகச் சிறந்த ஆட்டக்காரர். திறமையாளர். அவருக்கு நிறைய கன்சிஸ்டன்சி தேவை. 3வது ஆர்டரில் அவர் சிறப்பாக ஆடக் கூடியவர். பெரிய ஷாட் ஆடுகிறார். அவருக்கு அதிக பயிற்சி தேவையில்லை. நல்ல கன்சிஸ்டன்சி மட்டும் இருந்தால் போதும் என்று கூறியுள்ளார் ரமீஸ் ராஜா.

Story first published: Friday, March 20, 2020, 18:06 [IST]
Other articles published on Mar 20, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+