Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தென் ஆப்பிரிக்காவிடம் வங்கதேசம் படு தோல்வி-தப்பியது வெஸ்ட் இண்டீஸ்!

மிர்பூர்: தென் ஆப்பிரிக்காவை இன்று உலகக் கோப்பைப் போட்டியில் சந்தித்த வங்கதேச அணி, 206 ரன்கள் வித்தியாசத்தில் படு தோல்வியைச் சந்தித்தது. இதன் மூலம் அது காலிறுதி வாய்ப்பையும் இழந்தது.

South Africa Team

அதேசமயம், பி பிரிவில் மயிரிழையில் தொங்கிக் கொண்டிருந்த மேற்கு இந்தியத் தீவுகள் அணி, வங்கதேசத்தின் படு தோல்வியால் காலிறுதிக்குள் நுழையும் வாய்ப்பை பெற்று விட்டது.

பி பிரிவில்இடம் பெற்றுள்ள தென் ஆப்பிரிக்காவும் வங்கதேசமும் இன்று மிர்பூரில் நடந்த போட்டியில் மோதினர். இந்தப் போட்டி வங்கதேசத்திற்கு முக்கியமானதாகும். இதில் அது வெற்றி பெற்றால் காலிறுதிக்குள் நுழையும் வாய்ப்பு பிரகாசப்படுத்தியிருக்க முடியும். ஆனால் அதன் கனவு இன்று காணலாகிப் போனது.

முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி 284 ரன்களைக் குவித்தது. பின்னர் ஆடிய வங்கதேசம், தென் ஆப்பிரிக்க பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்களைப் பறி கொடுத்து 78 ரன்களில் சுருண்டு போனது.

இந்த படு தோல்வியின் மூ்லம் உலகக் கோப்பைப் போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டு விட்டது வங்கதேசம்.

அதேசமயம் புள்ளிகள் அடிப்படையில் இந்தியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் மேற்கு இந்தியத் தீவுகள் காலிறுதிக்குள் நுழைகிறார்கள்.
Story first published: Wednesday, December 7, 2011, 18:45 [IST]
Other articles published on Dec 7, 2011
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+